#677 - *அரசாங்கம் கொடுக்கும் கிறிஸ்துமஸ் பொங்கல் புதுவருடம் போன்ற விடுமுறை நாட்களில்
கிறிஸ்துவின் சபையார் கூட்டங்களை நடத்தலாமா?*
*பதில்*
ஜெபம், பாடுதல், கற்பித்தல், காணிக்கை கொடுப்பது, கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுதல் ஆகியவை தொழுகையின் கூறுகள்.
இவற்றில்
சில விஷயங்கள் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் (வாரத்தின் முதல்நாளில்) சபை ஒன்றுகூடும்போது
கட்டுப்படுத்தப்படவில்லை.
சபை
கூடியிருக்கும்போது ஜெபம் செய்யப்படுகிறது (அப். 2:42), ஆனால் அது மற்ற
சமயங்களில் கிறிஸ்தவர்களாலும் செய்யப்பட்டிருக்கிறது (அப். 11: 5).
கூடியிருக்கும்போது
பாடுவது சபையால் செய்யப்படுகிறது (I
கொரி. 14:26), ஆனால் மற்ற சமயங்களில்
கிறிஸ்தவர்களாலும் செய்யப்பட்டிருக்கிறது (யாக். 5:13).
தொழுகையில்
போதனை (கற்பித்தல்) செய்யப்படுகிறது (அப். 2:42, 20:7-9), ஆனால் அது மற்ற நேரங்களிலும்
செய்யப்பட்டிருக்கிறது (அப். 18:26).
ஆனால், கர்த்தருடைய பந்தியும்
காணிக்கை சேகரிப்பு என்று வரும்போது தனித்தனியாக செய்ய
முடியாது என்பதை காண்கிறோம். அவை வாரத்தின் முதல் நாளில் மட்டுமே செய்யப்பட்டன (I கொரி. 10: 16-17;
16: 1 -2; அப். 20:7).
ஆகையால், கிறிஸ்தவர்கள்
ஒன்றுகூடி வருவது ஞாயிற்றுக்கிழமை (வாரத்தின் முதல் நாள்) தவிர மற்ற நாட்களில் கற்றுக்கொள்வதற்கோ
அல்லது பாடல்களிலும் ஜெபத்திலும் ஈடுபடுவதில் தவறில்லை.
இருப்பினும், வாரத்தின் முதல்
நாளில்லாமல் மற்ற நாள் கூடுகையில் காணிக்கையோ கர்த்தருடைய பந்தியையோ எடுத்துக்கொண்டதாக
வேதாகமத்தில் இல்லை. அவை வாரத்தின் முதல் நாளில் செய்யப்பட வேண்டும் (I கொரி. 16:1-2).
ரோ.
14:5-6 வசனங்கள் “மற்றவர்கள்
செய்வதை பவுல் சொல்லிக்கொண்டு வருகிறார்” என்பதை நாம் கவனிக்க தவறிவிடக் கூடாது. இந்த வாக்கியத்தை முன்னிட்டு மற்ற நாட்களிலும் எதையும் செய்யலாம் என்று வாதாட
இடமில்லை. ஏனென்றால் கர்த்தருடைய பந்தியும் சபை வளர்ச்சிக்கான காணிக்கையும் குறிப்பாக
வாரத்தின் முதல் நாளில் கொடுக்கப்பட்டது அல்லது சேர்க்கப்பட்டது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக