*பதில்*
புதிய
ஏற்பாட்டு காலத்தில் நாம் இருக்கிறோம்.
இது
கிறிஸ்துவின் காலம்.
தசமபாக
காணிக்கை முறை – மோசேயின் காலத்தில் உள்ள இஸ்ரவேலருக்கு கட்டளையாகவே கொடுக்கப்பட்டது
(லேவி. 27:30-33, எண். 18:21-24;
உபா.
12:6-7; 12:17-19; 14:22-29;
26:12-15)
அப்படி
லேவியர்கள் தசம பாகம் வாங்கும் போது அதிலிருந்து ஒரு பாகத்தை தேவனுக்கு அவர்கள் கொடுக்க
வேண்டும் ( எண். 18:26, நெகே. 10:38)
மேலும்
தசமபாகம் என்பது பணத்தில் செலுத்தப்படுவது கிடையாது. அது நிலத்தின் வித்திலும்
விருட்சங்களின் கனியிலும் கொடுக்கப்பட கட்டளையிடப்பட்டது (லேவி. 27:30-33)
ஆசாரியர்களுக்கென்று
தேசத்தில் எந்த சுதந்திரமும் கிடையாது. தேவன் தான் எல்லா சொத்தும். (எண். 18:20; உபா. 10:9; 14:27; 18:1-2; யோசுவா 13:14; 13:33; 14:3; 18:7; எசே. 44:28)
தசமபாகமானது
– ஆசாரியர்கள் மற்றும் லேவியருக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டது.
தசமபாகமானது
– அவர்கள் (லேவியர்) மாத்திரமே பெற்றுக்கொள்ள அதிகாரம் உள்ளவர்கள். வேறு கோத்திரத்தாரோ புறஜாதியாரோ
தசமபாகம் பெற்றுக்கொள்ளும் அதிகாரம் இல்லை. எபி. 7:5
நாம்
வாழ்வது கிறிஸ்துவின் காலத்தில். இஸ்ரவேலராக இருந்தாலும் மோசேயின் பிரமானம்
முடிவுற்றது என்பதை மறந்துவிட கூடாது. ரோ. 10:4
தசமபாகம்
பெற்றுக்கொள்வதற்காக யாராவது நியாயபிரமாணத்தை முன்னிறுத்தினால் – சபிக்கப்பட்டவர்கள்
என்கிறது வேதம் (கலா. 3:10)
இக்காலத்தில்
– காணிக்கை என்பது சபை வளர்ச்சிக்காக கொடுக்கப்படுகிறது.
சபை
மூலமாக செய்யப்படும் காரியங்களுக்கு சபையார் ஊக்கமாக கொடுக்க வேண்டும்.
சபையின்
தேவைகளை பூர்த்தி செய்வது சபையாரின் கடமை.
10
சதவீதம் என்கிற நிர்பந்தம் அல்ல உதாரத்துவமாய் மனப்பூர்வமாய் உற்சாகமாய் திட்டமிட்டு
கொடுக்கவேண்டும்.
ஊழியர்
கையில் கொடுப்பது – அவரவர் விருப்பம். ஊழியரின் சொந்த தேவைக்கு அல்லது அவரது
குடும்ப தேவைக்கு உதவுவது தனிப்பட்ட உதவி.
சபைக்காக
எந்த சபையாரும் அந்த ஊழியர் கையில் கொடுக்கும் பட்சத்தில் – அதை அவர் சபை வளர்ச்சிக்கென்று
சபை காணிக்கையில் சேர்க்க வேண்டும்.
எந்த
காணிக்கையையும் – சபையின் மூலமாகவும் சபையில் வந்தும் கொடுத்தார்கள் என்பதே வசன ஆதாரம்.
2கொரி.
8:11-12
2கொரி.
9:7
2கொரி.
8:1-4
*எப்போது கொடுக்க
வேண்டும்?*
1. வாரத்தின்
முதல் நாளில் - 1கொரி. 16: 2
2. யாராவது
கேட்கும்போது - மத். 5:42
3. நமக்கு ஒரு
வாய்ப்பு கிடைக்கும்போது - கலா. 6:10
கொடுப்பவருக்கு
தேவன்
வெகுமதி அளிக்கிறார்:
தாராள மனப்பான்மை
பிற்காலத்தில் திரும்பப் பெறுகிறது – பிர. 11:
1
தாராளமாக வளரும்
- நீதி. 11:25
நாம் கொடுக்கும்போது,
அது திரும்பப் பெறப்படும் - லூக்கா 6:38
நாம் விதைக்கும்போது,
அறுவடை செய்வோம் - II கொரி. 9: 6-10
சுழற்சி தொடர்கிறது.
நாம் கொடுக்கும் காணிக்கைகள் தேவனை மகிமைப்படுத்துகின்றன
- II கொரி. 9:10-11
சபையின் மூலம் தேவனுக்கு கொடுப்பது வேதத்தில் உள்ளது.
தேவைபடும் சக மனிதர்களுக்கு
நாம் அளிக்கும் உதவியின் மூலம் தேவனுக்கு கொடுப்பது
வேதத்தில்
கண்டோம்.
உதவுவதில் காரணம் தேட வேண்டாம். தேவன் அதில் பிரியப்படுகிறார் - எபி. 13:16
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக