#669 - *கிறிஸ்துமஸ் தினத்தில் மற்றவர்க்கு புரியும்படி சுவிசேஷம் எந்தவிதத்தில் சொல்வது?* உங்கள் பதில் எல்லோருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன்..
*பதில்*
சுவிசேஷம்
என்றால் கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்தெழுதலை குறித்து சொல்வது (1கொரி. 15:3-4)
இயேசு
கிறிஸ்து பிறந்தார் என்ற ஒரு நாளில் கூடுகிற ஜனங்களுக்கு கிறிஸ்துவின் பிறந்த
நோக்கமே அவர் நமக்காக மரித்தார் என்று சொல்வதே.
நல்லவனுக்காக
ஒருவர் மரிக்கலாம் - ரோ. 5:7
ஆனால்
நாம் அக்கிரமக்காரராக இருந்தபோதே,
(ரோ. 5:6)
பாவியாக
இருந்தபோதே, (ரோ. 5:8)
பெலனற்றவர்களாயிருக்கும்போதே, (ரோ. 5:6)
தேவனுடைய
சத்துருக்களாயிருக்கும் போதே,
(ரோ. 5:10)
நமக்காக
கிறிஸ்து மரித்தார். (ரோ. 5:8)
தேவனுடைய
சமூகத்திலிருந்து நம்மை பிரித்த பாவம் என்ற பரிவான மரணத்தை ஜெயித்தார்.
அடக்கம்
பண்ணப்பட்டார்
உயிரோடு
எழுந்தார்.
இந்த
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள்
அதே
போல – தங்கள் பாவங்களுக்கு மரித்து
தண்ணீரில்
அடக்கம் பண்ணப்பட்டு
வெளியே
உயிர்த்தெழ வேண்டும்.
கிறிஸ்துமஸ்
என்று கற்பனையான ஒரு நாளை வேதத்திற்கு விரோதமாக கடைபிடிக்காமல் – கிறிஸ்துவின்
போதனைக்கு உடன்பங்காளிகளாகி – முறையான கிறிஸ்தவனாக வாழ வேண்டும்.
சிவப்பு
உடை அங்கி அணிந்து
குடில்
அமைத்து
3
சாஸ்திரிகளை மாட்டுக் கொட்டைகையில் வைத்து
பச்சை
மரத்தை அலங்கரித்து
கொண்டாடும்
இந்த பண்டிகை – வேதத்திற்கு முற்றிலும் விரோதமானது !!
3
சாஸ்திரிகளையோ, மாட்டு தொழுவத்திலோ பச்சை மரத்தின் அருகிலோ சான்டா கிளாசின் பரிசுகளோ –
வேதத்தில் தேடி கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லாததை செய்வது தவறானவை.
25ந்
தேதி கூடுபவர்களுக்கு உண்மையை உரக்க சொல்லி மனந்திரும்ப செய்ய அந்த நாளை சரியாக
பிரயோஜன படுத்திக் கொள்வது உகந்தது. (அப். 3:1)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக