#343 - *#342ம் கேள்வியில் – தம் ஊழியருக்கு
தெரியாமல் தேவன் எதையும் செய்யமாட்டார் என்கிற கருத்தோடு - கிறிஸ்துவின் வருகையை
குறித்த கேள்வியின் விரிவாக்கம் தேவை*.
*பதில்* :
கிறிஸ்துவின் 2ம் வருகையின் நாழிகை போலும் யாருக்கும் தொியாது
என்று கிறிஸ்துவே சொல்கிறார்.
மேலும் அந்த நாளோ நாழிகையோ - பிதா ஒருவர் மாத்திரமே அறிவார்
என்றும் கிறிஸ்து சொல்கிறார் (மத். 24:36)
மனிதர்களுக்கு பொருந்தாத வசனத்தை குறிப்பிட்டு - ஆரோனை போல
அழைக்கப்பட்டோம் என்றும், ரெவரென்ட், அப்போஸ்தலன்
என்று போட்டுக் கொண்டு - தங்களை ஊரார் / சபையார் மதிக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை
எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளைத்து சபையினரை கிறிஸ்துவிற்கு சீஷராக்காமல் தங்கள் சொந்த
பக்தர்களாக ஏற்படுத்தும் முயற்சிகளில் இந்த வித்தையும் ஒன்று.
வேதத்தில் இல்லாததை யார் சொன்னாலும் – அதற்கு கீழ்படியும் போது
அவர்கள் சொந்த மோட்ச பிரயாணம் பாதிக்கும் (ரோ. 9:33)
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நேரத்தை யாரிடத்திலும்
முன்கூட்டியே அறிவிக்கபடாது என்பதை வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது (மத். 24:36, 24:42, 44, மாற்கு 13:32)
பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும்
வேளைகளையும் அறிகிறது யாருக்கும் பொருந்தாது !!! (அப். 1:7)
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் வருகிறதாகையால் நிர்வாணமாய்
(பாவத்தில் / மீறுதலில்) நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, பரிசுத்தத்தை காத்துக்கொள்ளுவோம் (வெளி. 16:15)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக