#672 - *இன்றைய கிறிஸ்தவ உலகில் பரிசுத்த ஆவியானவர் எழுதிய புத்தகத்திற்கு
கொடுக்கும் அங்கீகாரத்தை காட்டிலும் பவுல் எழுதின புத்தகங்களுக்கு கொடுக்கப்படும்
அங்கீகாரம் அதிகம் அதிகம் ஏன் ?*
*பதில்*
முழு
வேதாகமம் என்பது 66 சிறிய புத்தகங்களை கொண்டது.
66புத்தகங்களுமே
தேவனுடைய மனிதர்களால் எழுதப்பட்டது.
எபிரேயர், யோபு போன்ற
இன்னும் சில புத்தகங்கள் எழுதியவர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படாவிட்டாலும்
அனைத்து புத்தகங்களையும் எழுத மூல காரணமாக இருந்தவர் பரிசுத்த ஆவியானவர் என்று
வேதம் சொல்கிறது.
2தீமோ. 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;
2சாமு. 23:2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்
கொண்டு பேசினார்; அவருடைய
வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
மத். 22:31 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்
என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
மத். 22:43 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த
ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
மாற்கு 12:24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
மாற்கு 12:36 நான் உம்முடைய சத்துருக்களை
உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று
கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
அப். 1:16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப்
பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
ரோ. 3:2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது
விசேஷித்த மேன்மையாமே.
ரோ. 15:4 தேவவசனத்தினால் உண்டாகும்
பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக
எழுதியிருக்கிறது.
கலா. 3:8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே
புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று
ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
எபி. 3:7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,
2பேதுரு 1:20-21 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான
பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே
உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே
ஏவப்பட்டுப் பேசினார்கள்.
பவுலின் கையால் எழுதப்பட்ட நிருபங்களாக இருந்தாலும் அவைகள் யாவும்
பரிசுத்த ஆவியானவரே எழுதியதாகையால் நாம் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக