வெள்ளி, 25 அக்டோபர், 2019

#577 - கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் அவருடைய வாழ்க்கையின் மாற்றம் என்ன கிறிஸ்துவிற்கு எப்படியாக கடைசி வரை ஊழியம் செய்தார்...(அவருடைய மரணம் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருந்ததா?). அப்.பவுலை இயேசு கிறிஸ்துவின் சிஷர்கள் யாராவது பார்த்தது உண்டா?

#577 - *பவுல் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் அவருடைய வாழ்க்கையின் மாற்றம் என்ன கிறிஸ்துவிற்கு எப்படியாக கடைசி வரை ஊழியம் செய்தார்...(அவருடைய மரணம் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருந்ததா?).  அப். பவுலை இயேசு கிறிஸ்துவின் சிஷர்கள் யாராவது பார்த்தது உண்டா?*

*பதில்*
*கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் பவுலின் வாழ்க்கையின் மாற்றம் என்ன - கிறிஸ்துவிற்கு எப்படியாக கடைசி வரை ஊழியம் செய்தார்* ...(அவருடைய மரணம் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருந்ததா?)

அப்போஸ்தலனாக இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டார்.

அநேக ஊர்களில் / தீவுகளில் / இடங்களில் கிறிஸ்துவின் இரட்சிப்பை பறைசாற்றி ஊழியம் செய்தார்.

பல பிராந்திய சபைகள் உருவாக காரணமாக இருந்தார்.

சத்தியத்திற்காக உபாதைகள் அடைந்தார்.

அரசாங்கத்தாலும் யூதர்களாலும் அடிக்கப்பட்டார்

சிறைவாசம் இருந்தார்.

இப்படி ஏராளம் ஏராளம் மேலே சொல்லப்பட்டவைகளுக்கான ஆதார வசன குறிப்புகள் :  அப் 22:14-21; 26:16-18; ரோ 1:1; 1கொரி 1:1; 9:1-2; 15:9; கலா 1:1; 1:15-16; எபே 1:1; கொலோ 1:1; 1தீமோ 1:1; 2:7; 2தீமோ 1:1; 1:11; தீத்து 1:1; 1:3, அப் 9:20-26, 11:26, கலா 1:18-19

பிரத்தியட்சமாக இஸ்ரவேலரல்லாத நம்மைபோல புறஜாதியாரினிடத்திற்கு சத்தியத்தை கொண்டு செல்லும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டார் – அப் 13:2-3;  13:47-48; 22:17-21; ரோ 11:13; 15:16; கலா 1:15-24

மிகுந்த தைரியத்தோடும் வைராக்கியத்தோடும் பொிய அதிகாரிகளுக்கும் இராஜாக்களுக்கும் முன்னதாக கெம்பீரமாய் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முழங்கினவர் – அப் 25:22-27, 26:1-11, 27:24; 28:17-31, 2தீமோ 4:16-17.

அவருடைய மரணம் நெருங்கும் வரை உத்தமாக இருந்தவர் – 2தீமோ 4:7, அப் 20:24; 1கொரி 9:24-27; பிலி 3:13-14; தன் கடைசி நாட்களில் – இராயனுக்கு முன்பதாக தீர்ப்பு எழுதப்படும் வரைக்கும் ஊழியம் செய்தவர் – அப் 28:31

*அப். பவுலை இயேசு கிறிஸ்துவின் சிஷர்கள் யாராவது பார்த்தது உண்டா*?

வேதாகமத்தை படித்து நானறிந்த வரையில்: யூதாஸ் காரியோத்தை தவிர – கிறிஸ்துவின் சீஷர்கள் ஏறத்தாழ அனைவரும் அப்போஸ்தலனாகிய பவுலை பார்த்து உறவாடியிருக்கிறார்கள் - வசனங்கள் : அப் 9:26-27, கலா 1:18-19, கலா 2:8-11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக