வெள்ளி, 18 அக்டோபர், 2019

#559 - லூக்கா 19:27 என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் - மாற்று மத சகோதரர்கள் இந்த வசனத்தை தவறாக கூறுகிறார்கள்.. இயேசு இப்படி பேசுகிறார் என்று?

#559 - *லூக்கா 19:27 என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் - மாற்று மத சகோதரர்கள் இந்த வசனத்தை தவறாக கூறுகிறார்கள்.. இயேசு இப்படி பேசுகிறார் என்று?*

இதற்கான விளக்கத்தை தாருங்கள் ஐயா🙏

*பதில்*
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வேற்று மதத்தினர் மாத்திரம் அல்ல கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்பவரே தவறாக திரித்து புரிந்து கொள்ளுதல் எப்போதும் இருக்கும் என்பதை வேதமே தெளிவாக சொல்கிறது.

லூக்கா 2:34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், *விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும்*, இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அப். 28:22 எங்கும் இந்த *மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக* நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

1கொரி. 11:19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

அப். 4:26 *கர்த்தருக்கு விரோதமாகவும்* அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

ஏனென்றால் – அவர் போதனையை யாரும் சரியாக முதலாவது படிக்க மாட்டார்கள். படித்தாலும் அதை உணர மாட்டார்கள். உணர்ந்தாலும் அதன் அர்த்தத்தை சரியான ரீதியில் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

உதாரணத்திற்கு :

1-ஒரே ஞானஸ்நானம் என்று வேதம் சொல்லியிருக்க பல பிரிவினர் குழந்தையில் ஒன்று, வளர்ந்த பின் ஒன்று, தண்ணீரில் எடுத்தபின் நெருப்பில் எரியவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பர்கள் ஏராளம். (எபே. 4:5, 5:26)

2-பரவலாக இப்போது பெருகிவரும் பெண் மேடை பிரசங்கியாளர்கள் / பெண் பாஸ்டர்கள் (1கொரி. 14:34-35)

3-தேவனுக்கு மாத்திரமே உரிய பட்டத்தை தங்கள் பெயருக்கு முன்னதாக Reverend என்று போட்டு கொள்ளும் ஆசையோடு இருப்பவர்கள் (சங். 111:9)

இப்படி ஏராளம் ஏராளம் இன்னும் உண்டு....

நீங்கள் குறிப்பிட்ட வசனம் இயேசு கிறிஸ்து உவமையாக ஒரு இராஜாவை குறித்து சொன்ன ஒரு சம்பவம் !! அதை மேலே அதே அதிகாரத்தின் லூக்கா 19:14ம் வசனத்தில் அறியமுடியும்.

ஆயினும் அந்த அந்த கால சட்டத்தின்படி  கீழ்படியாத கிறிஸ்தவர்கள் உட்பட கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியாதவர்களை அவருடைய நியாயதீர்ப்பில் அக்கினியில் போடப்படுவது அல்லது தண்டனைக்குள்ளாக்கப்படுவது நிச்சயம்.

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 2தெச. 1:7-8

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக