வெள்ளி, 4 அக்டோபர், 2019

#529 - யோவான் 21: 20-25 சொல்லப்படுகின்ற செய்தியை விளக்கி தாருங்கள் சகோதரரே

#529 - *நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்று வரும் யோவான் 21: 20-25 சொல்லப்படுகின்ற செய்தியை விளக்கி தாருங்கள் சகோதரரே*

*பதில்*
யோ.  21:20 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.

அப்போஸ்தலனாகிய யோவான் தான் இந்த சுவிசேஷ புத்தகத்தை எழுதுகிறார் (யோ. 21:24)

மற்ற அப்போஸ்தலரை காட்டிலும் பெத்சாயிதா ஊரானும் செபெதேயுவின் குமாரனுமான யோவான் மிக நெருக்கமாக ஆண்டவரிடத்தில் இருந்திருக்கிறார். மார்பில் சாய்ந்து கொண்டு இருக்கும் அளவிற்கு அவரின் அன்பு இருந்திருக்கிறது (மத். 4:21-22, 10:2, 27:55-56, மாற்கு 15:40)

மேலும் அந்த அன்பை குறிப்பாக தெளிவாக தன் எழுத்துக்களில் மூன்று முறை எழுதியும் வைத்திருக்கிறார் – யோ. 13:23, 21:7, 20:2

சில நேரங்களில் ஆண்டவரிடத்தில் கேள்வி கேட்க பயந்திருந்த போது யோவான் அப்படிபட்ட விரிசல் இல்லாமல் மிக தீவிர உரிமையோடு ஆண்டவரிடத்தில் இருந்ததை காணமுடியும் – யோ. 13:24-25

யோ.  21:21 அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.

பேதுருவின் மரணம் எவ்வாறு இருக்கும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேதுருவிடம் விளக்கி சொல்லி முடித்தபின்பு யோவான் வரும் போது – பேதுரு இயேசு கிறிஸ்துவிடம் யோவானின் மரணம் எப்படியிருக்கும் என்று கேட்கிறார் – யோ. 21:18-19

யோ.  21:22-23 அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.

பேதுருவின் கடுமையான மரணத்தை குறித்து இயேசு கிறிஸ்து சொன்னதால் அவர் மற்றவர்களை குறித்து விசாரிக்க ஆரம்பிப்பதிலிருந்து பேதுரு தொய்து போவதை உணர்ந்த இயேசு கிறிஸ்து – பேதுருவிடம் யார் எப்போது மரித்தால் உனக்கென்ன – நீ என்னை பின்பற்றி வா என்றார். (வ22)

பரிசுத்த ஆவியானவரின் பெலம் 10 நாட்கள் பின்பதாக அப்போஸ்தலருக்கு கொடுக்கப்பட்ட போது அந்த 12 பேறும் மரணத்தை துச்சமாய் எண்ணினார்கள் என்பது நமக்கு இன்னும் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது. அப். 1:8, 4:33

கிறிஸ்து தெரிந்து கொண்ட அப்போஸ்தலர்களில் 2பேரை தவிர மற்றவர்களின் மரணத்தை குறித்து  வேதத்தில் நாம் காண முடியாது.
1-யூதாஸ் ஸ்காரியோத்து – நான்று கொண்டு செத்தான் மத். 27:5
2-யாக்கோபு – அப். 12:1-2

மேலும் பேதுருவும் பவுலும்  - தங்கள் மரணம் நெருங்கியிருப்பதை தொியப்படுத்தி தங்கள் நிருபங்களில் எழுதியுள்ளார்கள் (2தீமோ. 4:6-8, 2பேதுரு 1:13-15)

மற்ற அப்போஸ்தலர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற தகவல் வேதத்தில் இல்லை.

வெளி. 1:9ன்படி யோவான் அப்போஸ்தலன் பத்மு தீவில் தன் காலத்தை கழித்திருக்கிறார். சரித்திர தகவல் படி பத்மு தீவு – சுமார் 30 சதுர மைல் சுற்றளவு என்றும் ரோமானிய சிறை கைதிகளை சாகும் வரை அங்கேயே விட்டு விடுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. கைதிகள் அந்த மலைக்காடுகளின் சிறு துவாரங்களில் தங்கள் கூடாரத்தை அமைத்து காலத்தை காட்டு மிருகங்கள் ஊறும் பிராணிகளின் மத்தியில் கழித்திருக்கிறார்கள்.

யோ.  21:24 அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

இந்த வசனத்தின் மூலம் யோவான் இந்த சுவிசேஷ புத்தகத்தை எழுதினார் என்று அறிகிறோம்.

யோ.  21:25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.   

யோவான் எழுதிய சுவிசேஷ புத்தகமானது யூதர்கள் புறஜாதியாரென்று யார் படித்தாலும் இலகுவாக புரியும் வண்ணம் எழுதப்பட்ட ஒரு சுவிசேஷ புத்தகம். ஆகவே தான் யோவான் பகுதியை மாத்திரம் தனி புத்தகமாக பல நிறுவனங்கள் அச்சிட்டு பள்ளிகூடங்களில் விநியோகிக்கும்.

இந்த பகுதியில் மிக முக்கியமாக – இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று ஒருவர் விசுவாசித்து தன் வாழ்க்கையில் கடைபிடித்து பரலோகம் போகக்கூடடிய விசுவாசத்தை பற்றிக்கொள்ள போதுமான தகவல்கள் மாத்திரமே இடம் பெற்றிருக்கும். (20:30-31)

இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களில்
சர்வ அதிகாரமும்,
எல்லா இடங்களிலும்,
அனைத்தின் மீதும்,
இயற்கைக்கு மீறியும்,
வானத்திலும் பூமியிலும்,
மரணத்திற்கு அப்பாற்பட்டும்,
அவருக்கு அதிகாரம் உண்டு என்பதை குறிக்கும் வகையில் ஏழு அற்புதங்களை மாத்திரம் அவர் குறிப்பிட்டு எழுதியிருப்பார். அவைகள் கீழே :

1.தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது 2:1-11
2.ராஜாவின் மனுஷரில் ஒருவருடைய குமாரனை குணப்படுத்தியது - 4:46-54
3.சப்பாணியை பெதஸ்தா குளத்தில் குணப்படுத்தியது - 5:1-15
4.ஐந்தாயிரம் பேருக்கு போஷித்தது - 6:5-14
5.தண்ணீரில் நடந்தது 6:16-24
6.பிறவி குருடனை குணமாக்கியது 9:1-7
7.மரித்து 3நாளான லாசருவை உயிரோடு எழுப்பியது -11:1-45

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக