#528
*கேள்வி*
புதிய ஏற்பாட்டில் அனேக நிரூபணங்களின் ஆரம்ப வாழ்த்துதலில் பிதாவாகிய
தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும்... என்று ஆரம்பிக்க படுகிறதே, கர்த்தர்
என்பது பிதாவாகிய தேவன் என்று தானே வேதங்களில் அனேக இடங்களில் வாசிக்கின்றோம்.
- இதனை விளக்கம் தாருங்கள்
வாழ்த்துதலில் அனேக நிரூபணங்களில் பரிசுத்த ஆவியானவர்
குறிப்பிடபடவில்லையே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தானே நிரூபணங்கள்
எழுதப்பட்டது பிறகு ஏன் அவரை
குறிப்பிடவில்லை
வேதத்தின் படி விளக்கம் தாருங்கள் சகோதரரே
*பதில்*
அருமையான
கேள்வியை கேட்டீர்கள். நன்றி.
சொல்லப்பட்ட
வாழ்த்துக்களை கோர்வையாக படிக்கும்போது படிப்பவர்களுக்கு
கேள்வி இலகுவாக புரியும்படி முதலில் பட்டியல் இடுகிறேன்.
ரோ
1:3 நம்முடைய *பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்*
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
1கொரி
1:3 நம்முடைய *பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்*
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
2கொரி 1:2 நம்முடைய *பிதாவாகிய தேவனாலும்,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்* உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கலா
1:3 *பிதாவாகிய தேவனாலும்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்* உங்களுக்குக் கிருபையும்
சமாதானமும் உண்டாவதாக;
எபே
1:2 நம்முடைய *பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்*, உங்களுக்குக்
கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
பிலி 1:2 நம்முடைய *பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினாலும்* உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கொலோ 1:2 .... நம்முடைய
*பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்* உங்களுக்குக் கிருபையும்
சமாதானமும் உண்டாவதாக.
1தெச 1:1... நம்முடைய *பிதாவாகிய
தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்* உங்களுக்குக் கிருபையும் சமாதானமும்
உண்டாவதாக.
2தெச 1:2 நம்முடைய *பிதாவாகிய
தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்* உங்களுக்குக் கிருபையும் சமாதானமும்
உண்டாவதாக.
1தீமோ 1:2 .... நம்முடைய
*பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும்* கிருபையும்
இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
2தீமோ 1:2... *பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து
இயேசுவினாலும்* கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
தீத்து
1:2 *பிதாவாகிய தேவனாலும்,
நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்*, கிருபையும்
இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
பிலே1:3 நம்முடைய *பிதாவாகிய தேவனாலும்,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்*, உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
மேற்கூறியவை
அப்போஸ்தலனாகிய பவுலின் கடிதங்களின் தொடக்க வாழ்த்துக்களின் பட்டியல்.
வாழ்த்து
சொல்லி எழுதுவது பவுலின் எழுத்து முறை. இப்படி வாழ்த்து சொல்லி எழுதும் முறை மற்ற
நிருபங்களில் காண முடியாது !!!
பரிசுத்த
ஆவியானவரின் பெயரில் வாழ்த்துக்கள் இடம் பெறவில்லை என்பதில் இருந்து நாம் அறிவது
என்ன?
கடிதத்தைப்
பெறுபவர்களில் பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே இருக்கிறார் என்று ஆசிரியர் கருதுகிறார்
என்றே நான் உணருகிறேன். பிதாவானவர் பரலோகத்தில் இருக்கிறார், குமாரன் அவரின்
வலது பாரிசத்தில் இருக்க பூமியிலிருந்து ஏறினார், ஆனால்
பரிசுத்த ஆவியானவரோ பூமியில் அனுப்பப்பட்டார். யோ 16:7-15
எனவே, பரிசுத்த
ஆவியானவர் ஏற்கனவே திருச்சபையுடன் இருந்தார் ... என்பதை தெளிவுபடுத்துகிறார்.
நம்மோடு
தொடர்ந்து *ஐக்கியத்தில் இருக்கும்படியாக* கடைசியில் பரிசுத்த ஆவியானவரை
குறிப்பிட்டு வாழ்த்துவதை கவனிக்கவும்:
2கொரி 13:14 கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும்,
*பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும்*, உங்கள்
அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
*Eddy Joel*,
PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp
(Locked) குழுவில் இணைய:
** அணைத்து கேள்வி பதில்களையும் காண : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக