வியாழன், 3 அக்டோபர், 2019

#527 - கிறிஸ்தவர் வீட்டு விசேஷங்களில் ஆரத்தி எடுக்கலாமா...???

#527 - *கிறிஸ்தவர் வீட்டு விசேஷங்களில் ஆரத்தி எடுக்கலாமா...???* குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டும் வைக்கிறார்களே?

*பதில்*
(கண்) திருஷ்டியை கழிப்பதாக இந்துக்கள் செய்யும் ஒரு விதமான சடங்கு / சம்பிரதாய ஆரத்தி எடுப்பது.

இந்த சம்பிரதாயத்தின் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறார்களோ அவருக்கு இந்துக்களின் தெய்வமாகிய லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் (இந்துக்களின் தெய்வமாகிய லட்சுமியை குறிக்கும்) சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு (இந்துக்களின் தெய்வமாகிய சரஸ்வதியை குறிக்கும்) சேர்த்து கலப்பார்கள். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் வேதியல் விதிப்படி தண்ணீர் சிவப்பாக மாறிவிடும். இதை ஒரு தட்டில் எடுத்து அதற்கு தீச்சுடர் ஏற்றி சம்பந்தப்பட்ட நபரின் உடலை மூன்று முறை சுற்றி விடுவார்கள்.

இந்துக்களின் முறைக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்பந்தம்? (2கொரி. 6:15)

நம்மை பார்த்து மற்றவர்கள் நன்மையை கற்றுக்கொள்ளும்படி (விசுவாசத்தில் வளரும்படி) நம் செய்கைகள் இருத்தல் அவசியம். (பிலி. 2:4)

தன் ஜாதியை பெயரோடு சேர்த்துக்கொள்வதும் தன் ஜாதியை உரிமை பாராட்டுவதும் அடையாளப்படுத்திக்கொள்வதும் இந்துக்களின் முறை. அதை கிறிஸ்தவர்கள் பின்பற்றினால் அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல (ரோ. 10:12)
 
தங்கள் குழந்தைக்கு கன்னத்திலும் சரீரத்திலும் திருஷ்டிக்கென்று கருப்பு புள்ளி வைக்கும் பழக்கம் கிறிஸ்தவர்கள், ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் இன்றும் நடைமுறையில் இருப்பது அவர்களது கிறிஸ்தவ வேஷத்தையே காட்டுகிறது. மனந்திரும்பி இவர்கள் இரட்சிக்கப்படவேண்டும். அவர்களது பிள்ளைகளை காப்பாற்றுவது தேவன்... இந்த கரும்புள்ளிகள் அல்ல!
 
ஏசா. 47:12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

பட்சபாதம் / பாரபட்சம் பார்ப்பவர் தங்கள் தீய பழக்கத்தை விட்டு தேவனுடைய பிள்ளையாக உண்மையாக / முழுமையாக மாறவேண்டும். ரோ. 3:22, 3:29-30, 4:11-12, 9:24; அப். 10:34-35, 15:8-9; கலா. 3:28; எபே. 2:18-22; 3:6; கொலோ. 3:11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக