வியாழன், 3 அக்டோபர், 2019

#526 - ஆதியாகமத்தில் ஏதேன் தோட்டத்தில் பொன் விளையும் என்று இருக்கிறது அப்படியானால் பொன் விளையக்கூடியதா செடிபோல

#526 - *ஆதியாகமத்தில் ஏதேன் தோட்டத்தில் பொன் விளையும் என்று இருக்கிறது அப்படியானால் பொன் விளையக்கூடியதா செடிபோல*

*பதில்*
ஆதியாகமம் 2:11ம் வசனத்தில் இப்படியாக வாசிக்கிறோம்.
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

பைசோன் என்ற ஆறு ஆவிலா தேசம் வழியாக ஓடுகிறது. அந்த தேசத்தில் பொன் இருக்கிறது என்று வசனம் சொல்கிறது.

ஆவிலா என்கிற இடம், எகிப்துக்கு முன்பாக, அசீரியாவுக்குச் செல்லும் வழியில் இருந்தது, அரேபியா பாலைவனத்தில் வசித்த இஸ்மவேலியர்களின் எல்லையாக அது இருந்தது (ஆதி. 25:16-18)

ஆவிலா தேசத்தை முழுவதும் பைசோன் ஆறு சுற்றி பாய்ந்தது. நோவாவின் காலத்தின் வெள்ளத்திற்குப் பிறகு, கூஷின் மகன்களில் ஒருவரான (நோவாவின் பேரன்) ஹவிலா என்று பெயரிடப்பட்டார். (ஆதி. 10:7)

நிலங்களை நினைவில் வைத்து பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம் அப்பவே இருந்துள்ளது !! பாரசீக வளைகுடாவிற்கும் செங்கடலுக்கும் இடையிலான பிராந்தியத்தில் ஹவிலாவும் அவரது சந்ததியினரும் குடியேறினர், இப்போது நாம் அரேபிய பாலைவனம் என்று அழைக்கப்படும் பகுதி, வடமேற்கு முனையில் உள்ள இடம் ஆவிலா என்பது தோராயமான அனுமானம்.

மேலும் நோவாவின் வெள்ளத்தின் உலகளாவிய அழிவுக்குப் பிறகு, இந்த நதிகளின் இருப்பிடம் இன்று எந்த அளவிலும் உறுதியாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக