#525 - *தாவீதோடே எங்களுக்குப் பங்கேது?* 2 நாளாகமம் 10:16 விளக்கவும்
ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள்
ராஜாவுக்கு மறுஉத்தரமாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின்
குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை, இஸ்ரவேலே,
உன் கூடாரங்களுக்குப் போய்விடு, இப்போது
தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி,
இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 2 நாளாகமம் 10:16
*பதில்*
சாலமோன்
இறந்தபின் அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான். (2நாளா. 9:31)
இராஜாவாகிய
சாலமோனுக்கு எதிரான நடவடிக்கையில் யெரோபெயாம் என்பவன் ஈடுபட்டதால் – அவனை கொல்ல
எத்தனித்த சாலமோன் கைக்கு தப்பி எகிப்திற்கு ஓடிபோனவன் சாலமோன் இறந்த செய்திகேட்டு
தன் நாடு திரும்பினான் (2நாளா. 10:2,
1இரா. 11:26-40)
அவனுடைய
தலைமையில் சாலமோனின் குமாரனான ரெகொபெயாம் என்ற தங்கள் புதிய அரசனிடத்தில் ஒரு
சாரார் (ஏறக்குறைய இஸ்ரலேவனைத்தும்) போய் உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை
எங்கள்மேல் வைத்தார்; இப்போதும்
நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது
உம்மைச் சேவிப்போம் என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில்
வாருங்கள் என்றான்; அப்படியே
ஜனங்கள் போயிருந்தார்கள்.
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில்
அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை
சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும்
பட்சத்தையும் காண்பித்து,
அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள்
என்றார்கள்.
முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே
வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி, அவர்களை
நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று
என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை
சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: … என்
சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள்
நுகத்தை அதிக பாரமாக்குவேன்;
என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத்
தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே
ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
தங்கள்
புதிய இராஜாவின் வார்த்தைகளை கேட்டு இந்த ஜனம் அவனுக்கு எதிராக பிரிந்து போனார்கள்.
(2நாளா. 10:4-16)
பிரிந்ததில்
– யூதா கோத்திரமும் பென்யமீன்
கோத்திரமும் தெற்கு எருசலேமில் எருசலேமை தலைநகராக கொண்டு சாலமோனின் மகனாகிய ரெகொபெயாமோடும்
மீதமுள்ள அனைத்து கோத்திர ஜனங்களும் வடக்கு பகுதியில் போய் இவ்வாறு பிரிந்து போனார்கள்.
*இந்த
சம்பவத்திற்கு பின்னர் வேதாகமத்தில் – வடக்கு பகுதியில் உள்ளவர்கள் இஸ்ரவேலர்
என்றும் தெற்கு பகுதியில் உள்ளவர்கள் யூதர்கள் என்றும்
அடையாளப்படுத்தப்பட்டார்கள்*. (2நாளா. 10:16-19, 11:1-4)
மிக
மிக சுருக்கமாக உங்களுக்கு எளிதாக புரியும் படி சாராம்சத்தை மாத்திரம்
எழுதியிருக்கிறேன்
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
by : +91 96003 73282
பதிலளிநீக்குOne doubt before solomon kingdom...first david rule jude 2sam:2:4 after that only he rule israel 2sam:5:3
Answered:
Though David was an official king over Israel (2 Sam 3:39)
The sequence goes as follows:
David was ordained secretly by Samuel when Saul was ruling the Israel kingdom.
After Saul's death (ch 1) - Tribe Jude came forward first to accept David as King. v4, 7
But Abner - declared Saul's son Isboseth as the successor - V8-9
People of Israel were against God's instruction - Ch 3:1
They were not accepting God's decision of David as King over them. V7-10, v18
Then Abner sends message to David - V12
But Joab killed Abner - V24-27
David mourn for Abner and all people understood the wiles behind it - v32-37
Meviboseth was killed by David's supporters- ch 4:5-6
But David killed them - because the way they executed was wrong - Ch 4:9-12
Finally - The Entire Israel accepted David as their king - Ch 5:1-4
Summary :
David was an official king - but he was facing internal issues between the Tribes..
We could see the softness of Jude & Benjamin Tribe towards David... that love and affection came forth after Solomon's death and they followed David's generation... That is because Jesus was promised in the David's generation and Jesus born in Jude Tribe..
Hope i had clarified.
thanks
Eddy