செவ்வாய், 24 செப்டம்பர், 2019

#499 - மரியாள் எனும் ஸ்திரீயால் நமக்காக இறைவனிடம் வேண்ட முடியுமா?

#499 - *மரியாள் எனும் ஸ்திரீயால் நமக்காக இறைவனிடம் வேண்ட முடியுமா?*

*பதில்*
மனிதருக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தர் இயேசு ஒருவரே (1தீமோ. 2:5)

நமக்கு என்ன தேவையோ – அதை நேரடியாக பரம பிதாவினிடம் கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தோடு கேட்க நாம் உரிமை பெற்றிருக்கிறோம் (யோ. 16:23-24; 14:13-14; 15:7, 16; மத். 21:22; எபே. 2:18, 3:14-20;

நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுபவர் – இயேசு கிறிஸ்து (1யோ. 2:1)

நாம் ஜெபிக்க முடியாமல் விக்கி தவிக்கும்போது ஜெபிக்க உதவுபவர் – பரிசுத்த ஆவியானவர் (ரோ. 8:26)

மரியாளோ, பேதுருவோ, பவுலோ அல்லது வானத்தில் உள்ள தேவ தூதர்களோ எப்பேற்பட்ட பரிசுத்தவான்களோ, நமக்காக அவர்கள் பிதாவினிடம் பரிந்து பேச முடியாது.

மேலும் பரிசுத்தவான்கள் அனைவரும் கிறிஸ்துவின் வருகை வரை பரதீசுவில் இளைப்பாறிக்கொண்டிருப்பார்கள்.

பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்துக்கொண்டு நமக்காகப் பரிந்துபேசும் வேலையை சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே நமக்கு ஏற்ற வேளையில் ஏற்ற சகாயம் கிடைக்கும்படியாக எந்த தயக்கமும் இல்லாமல் – யாருடைய சிபாரிசையும் எதிர்பார்க்காமல் தைரியமாக கிருபையின் ஆசனத்தில் உட்காரந்திருப்பவரை நாடுவோம். எபி. 4:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக