#443 - *ஊரிம் தும்மீம் விளக்கவும்*
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம்
என்பவைகளை வைப்பாயாக. ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள்
அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும். ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல்
புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும்
தரித்துக்கொள்ளவேண்டும். யாத்:
28:30 - ஐயா இந்த
வசனத்தை விளக்கவும்.
*பதில்*
:
பதிலளிப்பதற்கான தரவு எதுவும் இல்லை என்ற கேள்வியால்
சந்தித்தபோது, "ஊரிம் மற்றும் தும்மீமுடன்” ஒரு ஆசாரியன் எழுந்திருக்கும்
வரை சிரமத்தைத் தீர்ப்பதற்கு ஒத்திவைக்க ஒப்புக்கொண்டனர் இஸ்ரவேலர்கள் எஸ்றா 2: 63; நெகே 7:
65.
ஊரிம்
என்றால் "ஒளி" என்றும்
தும்மீம்
என்றால் "முழுமை" என்றும் பொருள்.
நம்மில்
சீட்டு போட்டு ஒரு முடிவிற்கு எட்டுவது போல இந்த முறையை தேவனிடத்திலிருந்து பதில்
பெற இஸ்ரவேலர்கள் பயன்படுத்தியது.
தேவனை
தவிர வேறு எந்த விக்கிரகத்தையும்
வணங்குவதை வேதம் கண்டிக்கிறது
(யாத் 20:
3).
தீர்க்கதரிசிகள் தேவனால் அனுப்பப்பட்டனர்
(எரே 44: 4) மற்றும் தேவன்
சொல்வதை ஜனங்களுக்கு எடுத்துரைத்தனர் (2 சாமு 36:12).
இஸ்ரவேலர் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண தேவனுடைய சந்நிதியில்
ஊரிம் தும்மீம்மை போட்டு தேவன் அவர்களுக்குப் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையிலும் இதை செய்தனர் (யோசு 18:
6).
இந்த இரண்டு கற்களையும் பிரதான ஆசாரியன் தன் மார்பில் வைத்திருக்கும்படி
தேவன் கூறினார் (யாத்
28:30).
இப்போது
நமக்கு பிரதான ஆசாரியன் இயேசு கிறிஸ்துவே (எபி 6:20)
சீட்டு
போட்டு அல்ல தேவ வார்த்தையின் படி நாம் நடக்க வேண்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக