திங்கள், 9 செப்டம்பர், 2019

#442 - இயேசு நித்திய பிதா என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறாரே அதற்கு விளக்கம் கொடுங்கள்

#442 -  *இயேசு நித்திய பிதா என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறாரே*  அதற்கு விளக்கம் கொடுங்கள்

*பதில்* : பிதாவை வெளிப்படுத்த வந்ததாக அவர் சொல்லியிருக்க தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை "நித்திய பிதா" என்று எப்படி அழைப்பது? (லூக்கா 10:22; யோவான் 1:18)

"நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார் இயேசு கிறிஸ்து (யோ 10:30).

ஆகையால், ஏசாயா 9:6ல் கொடுக்கப்பட்டுள்ள பட்டங்கள் இயேசுவிற்கும் பொருந்துகிறது.

இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களின் காரணமாக, இயேசுவை குமாரன் என்றும் பரலோகத்திலுள்ள தேவனை பிதா என்றும் அழைக்கிறோம்.

"என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்." (யோ 6:38). என்றார் கிறிஸ்து.

"அவர் குமாரனாயிருந்தும பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு," (எபி 5:8).

ஆயினும், இயேசு தேவனாயிருக்கிறார். அவர் உலகை சிருஷ்டித்தவர் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." (யோ 1:3).

மனிதகுலத்தின் படைப்பாளராக, இயேசு நம் அனைவருக்கும் தந்தை. (கொலோ 1:16; எபி 2:10)

ஏசாயா மேசியாவை மகன் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

மேசியாவின் மனிதகுலத்துடனான உறவை பல்வேறு தலைப்புகள் கையாள்கின்றன.

மேலும், பழைய ஏற்பாட்டில் "கன்மலை" என்று அழைக்கப்பட்டவர் கிறிஸ்து என்பதை 1 கொ 10:4 சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துகிறது.

பிதாவாகிய தேவன் இஸ்ரவேலுக்கு பலவாறு தன்னை வெளிப்படுத்தினார்.

அவர்களை எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார் - வாங்கினார். அவர்களை ஒரு தேசமாக நிறுவினார். இரவும் பகலும் கூடவே இருந்தார். வானத்திலிருந்து ஆகாரம் அளித்தார். அவர்கள் துணிகள் கூட கிழியாமல் பார்த்துக்கொண்டார். அவ்வளவு தூரம் நடையாய் நடந்தும் கால் வீங்காமல் பார்த்துக்கொண்டார். உபா 8:4 

எரேமியா 31:9-ல் “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்" என்றார்.

அது போல –

பாவத்திலிருந்து நம்மை மீட்டெடுத்தவர், நாம் அழியாமல் இருக்க, வேதனைபடாமல் இருக்க, நரகத்தில் தள்ளப்படாமல் இருக்க - நமக்காக நம் அனைவரது பாவங்களையும் தன் சொந்த சரீரத்தில் சுமந்து சரீரம் கிழிக்கப்பட்டு வாரினால் அடிக்கப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட இயேசு சிலுவையில் மரித்தார்... இவ்வாறாக ஒரு தகப்பன் தன் பிள்ளையை பராமரித்து காப்பாற்றுவது போது தான் செய்யும் காரியத்தை குறிப்பிடுகிறார். 1பேது 2:24
 
தன் சீஷர்களை பார்த்து பிள்ளைகளே என்று கூப்பிட்டதை நாம் மறக்க முடியாது (மாற்கு 10:24, யோ 21:5). அதுபோலவே அப்போஸ்தலர்களும் “பிள்ளளைகள்” என்று அழைத்தது (1கொரி 4:14, 1யோ 2:1, 2:13, 2:28, 3:18) நம்மை/அவர்களை ஆவிக்குரிய பிள்ளைகளாக காண்பிக்கிறதேயன்றி சொந்த பிள்ளைகளாக அல்ல.

தன் இரத்தத்தினால் நம்மை அவர் சம்பாதித்திருக்க (1பேது 1:19, 1கொரி 7:23) – எப்போதும் நமக்காய் பரிந்து பேசி நம்முடைய நித்திய வாழ்விற்கான உத்திரவாதத்தை அவர் கவனிக்கிறவராகையால் – *நித்திய பிதா* என்று ஏசாயாவில் பார்க்கிறோம்.

வேதத்தில் காணப்படாத திரித்துவம் அல்ல – வேதத்தில் சொல்லப்படும் தேவத்துவத்தின் அடிப்படையில் பரம பிதா தாமே நமக்கு பிதாவானவர்.

இரட்சிப்பின் அடிப்படையிலே ஒப்பனையாக கிறிஸ்துவை பிதா என்று ஏசாயா அழைப்பதை 9:6ல் பார்க்கிறோம்.

கிறிஸ்துவானவர், பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். 1பேது 3:22

கிறிஸ்துவிற்கு தலை பிதாவானவர். 1கொரி 11:3

யோ 14:16 நான் (1) பிதாவை (2) வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய (3) வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்ற வசனமும்;

1பேது 1:2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது என்ற வசனமும் இன்னும் அநேக வசனங்களும் திருஷ்டாந்தமாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

யோ 20:17 இயேசு அவளை நோக்கி: ...  நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மூவரா அல்லது ஒருவரா என்பதை #431ல் வாசிக்கவும்.

நித்திய பிதா என்பது தன்மையின் அடிப்படையில் கிறிஸ்து இயேசுவை குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக