#441 - *நம்முடைய செயல்களால் நம்மை நீதிமான்கள் ஆக்கிக்
கொள்ள முடியுமா?
அப்படி நம்மை மாற்றிக் கொள்ள முடியாது என்றால்
எல்லாமே தேவனுடைய திட்டப் படி தானே நடை பெறுவதாக பொருள் அப்படியானால் நாம் ஏன்
குற்றவாளிகளாக்கப்படுகிறோம்?
*பதில்* :
நம்மை நாமே நீதிமான்கள் ஆக்கிக் கொள்ள முடியுமா என்ற
கேள்விக்கு இரண்டு வகையில் உணரவேண்டியுள்ளது.
*முதலாவது* – பாவத்தில் உள்ளவர்கள்
(இரட்சிக்கப்படாதவர்கள்) தங்களுக்கு தாங்களே பாவத்தை கழுவிக்கொண்டு
பரிசுத்தமாக்கிக் கொள்ள முடியாது. பாவமில்லாத ஒருவரே கழுவ முடியும். ஆகவே தான்
பாவமில்லாத இயேசு கிறிஸ்து நமக்காக அனுப்பப்பட்டார். வார்த்தையை விசுவாசித்து
மனந்திரும்பி விசுவாசத்தை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது பாவம்
மன்னிக்கப்பட்டு நீதிமானாகிறான் 1யோ. 3:5, அப். 2:38,
22:16
*இரண்டாவது* : இரட்சிக்கப்பட்டவர்களுக்கானது. நம்முடைய
பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா
அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும்
உள்ளவராயிருக்கிறார். 1யோ. 1:9
அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை
அடைவான்; பட்சபாதமே இல்லை. கொலோ.
3:25
சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க
பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 2கொரி. 5:10
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப்
பலனளிப்பார் ரோ. 2:6
கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையை பின்பற்றி அநுதினமும்
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய அழைக்கப்பட்டிருக்கிறோம்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான்
பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று
எழுதியிருக்கிறதே. 1பேது. 1:15-16
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவதாலே மாத்திரமே நாம் நீதிமான்களாகமுடியும்.
சொந்த செயல்கள் நம்மை பாவத்திற்குள்ளாக்கும். தீத்து 3:6, கலா. 3:24, 2:17, ரோ. 6:17, ஆதி.
6:5
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக