#439 - *கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா
மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். இந்த
வசனத்தை வைத்து நம்மை நாமே ஆறுதல் படுத்திக் கொள்ளலாமா?
ரோமர் 12:18
*பதில்*
:
உண்மையான
கிறிஸ்தவனின் தன்மை எப்படி இருக்கவேண்டும் என்று 9ம் வசனத்திலிருந்து 21 முடிய
காண்கிறோம்.
ரோ. 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை
வெறுத்து, நன்மையைப்
பற்றிக்கொண்டிருங்கள்.
ரோ. 12:10 சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே
ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
ரோ. 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே
அனலாயிருங்கள்; கர்த்தருக்கு
ஊழியஞ்செய்யுங்கள்.
ரோ. 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே
பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே
உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோ. 12:13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு
உதவிசெய்யுங்கள்; அந்நியரை
உபசரிக்க நாடுங்கள்.
ரோ. 12:14 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி
சபியாதிருங்கள்.
ரோ. 12:15 சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே
அழுங்கள்.
ரோ. 12:16 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச்
சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு
இணங்குங்கள்; உங்களையே
புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.
ரோ. 12:17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா
மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோ. 12:18 கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும்
சமாதானமாயிருங்கள்.
ரோ. 12:19 ...
நீங்கள் பழிவாங்காமல்,
கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
ரோ. 12:20...
உன் சத்துரு பசியாயிருந்தால்,
அவனுக்கு போஜனங்கொடு;
அவன் தாகமாயிருந்தால்,
அவனுக்குப் பானங்கொடு;
ரோ. 12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை
நன்மையினாலே வெல்லு.
நம்
மனதில் எந்த அழுக்கும் யார்மீதும் இருத்தல் கூடாது. அவர்களோடு ஒப்புரவாகி விட்டால்
தான் நாம் குணமடைய முடியும் (யாக் 5:16)
நம்
ஜெபம் கேட்கபடவேண்டுமானால் நாம் ஒப்புரவாகிவிடவேண்டும் (எபே 2:26)
கூடுமானால்
எல்லாரிடமும் என்பதன் கருபொருள் - நீங்கள் தாழ்ந்து போயும் மன்னிப்புக் கேட்டும்
இரங்கி போயும் அவர்கள் ஒத்து வரவில்லையென்றால் – அது அவர்கள் கணக்கு. எபி.
12:14; யாக். 3:16-18;
1பேதுரு 3:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக