#437
*கேள்வி*
வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய
ஏற்பாட்டில் சிறுவர்களை, சிறுபிள்ளைகள் குறித்து அடையாளப்படுத்தும்
சாராம்சங்கள் என்னனென்ன?
*குறிப்பு: சிறு பிள்ளைகளைப் போல் மனம்
திரும்பாவிட்டால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலாது என்று இயேசு
கிறிஸ்து கூறியிருக்கிறார்...
அதேபோல சிறு குழந்தைகள் அதாவது அரும்புகளை
அடையாளப்படுத்தும் முக்கிய அம்சங்கள் வேதாகமத்தில் என்ன?
*பதில்*
:
அவர்களின் ஜீவன் அப்பாவித்தனம்,
மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ஆகியவற்றால் நிரம்பியுள்ளன.
உண்மையில் இயேசு கிறிஸ்து, நாம்
குழந்தைகளைப் போல இருக்கவும்,
விசுவாசமும் நம்பிக்கையும் நிறைந்து அவரிடம் வரவும் சொல்கிறார்.
குழந்தைகள் கடவுளின் படைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் (ஆதி 1:28)
குழந்தைகளை ஒரு ஆசீர்வாதம் தன் சுதந்திரம் மற்றும்
பரிசு என்று தேவன்
அழைக்கிறார்! (சங்
127:3)
குழந்தைகள்
எதையும் கற்றறியாத வெறுமையான / காலியான பாத்திரமாயிருக்கிறார்கள் (நீதி 22:6) – அவர்களுக்கு சரியானதை சொல்லிக்கொடுக்கவேண்டும்
வெகுளியாக
இருப்பதால் ஒழுங்கு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் (நீதி29:17)
அவர்கள்
எப்போதும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (மாற்கு 10:16)
அவர்கள்
இருதயத்தில் மடமை மறைந்திருக்கும் (நீதி 22:15)
தேவனை
குறித்து எப்போதும் அவர்கள் போதிக்கப்படவேண்டும் (உபா 6:7)
அவர்கள்
பெற்றோருக்கு கீழ்படியும் போது –
கர்த்தர் பிரியப்படுகிறார்
– கொலோ
3:20
கள்ளம்
கடற்றவர்களாயிருப்பதால் –
பரலோகத்தின்
சொந்தக்காரர்கள் (மத் 19:14)
அவர்கள்
எப்போதும் உண்மையை நம்புபவர்கள் / தேடுபவர்கள் (மாற்கு 10:14)
*Eddy Joel*,
PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம். 1, 2, 3ம் குழு – முழு உறுப்பினர்களை
கொண்டுள்ளது. புதிய 4ம் குழுவின் லிங்க் : https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
** அணைத்து கேள்வி பதில்களையும் காண : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக