வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

#353 *கேள்வி* கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்


#353
*கேள்வி*
கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று சொல்லியிருக்க – இயேசுவே, தேவாலயத்தில் சென்று புறா விற்கிறவர்களை சாட்டையால் அடித்து விரட்டினாரே – விளக்கவும்.

*பதில்* :
கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்கிற வசனம் சங் 4:4லும் எபே 4:26லிம் வருகிறது.

கோபம் – உணர்வு
பாவம் என்பது – அதன் விளைவு.

ஒரு நாள் விடியல் சங்கடமாக துக்கமாக சோம்பலாக நமக்கு விடிந்தாலும் செய்ய வேண்டிய தலையாய கடமைகளை செய்து விடுவோம். வேலைக்கு போவது சாப்பிடுவது போன்றவை. ஆனால் சபைக்கோ ஜெபத்திற்கோ போவதற்கான சாக்கு போக்கு சொல்ல மனம் தூண்டும்.

நம்முடைய கோபம் – தவறான செய்கைகளையோ மற்றவர்களை தேவனுக்கு நேரே போகும் பாதையில் இடறுதலையோ உண்டாக்கிவிட கூடாது (1கொரி 10:33)

கோபப்படுவது பாவமல்ல – கட்டுக்கடங்காத கோபம் பாவத்தை விளைவிக்கிறது.. (யாக் 1:19)

இயேசுவானவர் கோபப்பட்டபோது – தேவனுக்கு உகந்தவற்றை செய்தார்.

1- அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று (மாற்கு 3:5)

2- தேவாலயத்தில் ஜெபிப்பதும் ஆராதிப்பதையும் விட்டு மார்கெட் போல ஆக்கின ஜனங்களை விரட்டியடித்தார். (மத் 21:12)

3- மத் 23:13-36

4- ரோமர் 2:5-6

5- 2தெச 1:7-9

அவர்கள் பிரமாணத்தின்படி இஸ்ரவேலர்கள் வருஷத்தில் 3 முறை தங்கள் காணிக்கைகளான மிருகங்களோடு எருசலேமிற்கு பிரயாணம் செய்ய வேண்டும் (உபா 16:16-17, உபா 14:23-26)

அப்படி அவர்கள் தங்கள் ஆடுமாடுகளை தொலை தூரத்திலிருந்து ஓட்டி வருவது அவ்வளவு சுலபமில்லை. ஆகவே அதை பணமாக்கி எருசலேமில் வந்து காணிக்கையாக இருந்த மிருகங்களை விற்ற பணத்தில் ஆடு மாடுகளை வாங்கி பலி செலுத்த வேண்டும் (உபா 14:25-26).

அந்த முறையில் ஆலய வளாகத்திற்கு வெளியே இந்த வசதிக்காக இருந்தவர்கள் நிறைய காசு பார்த்தார்கள். (கள்ளர் குகை – மத் 21:13)

உதாரணத்திற்கு நம் ஊரில் 5ரூபாய் டீ கிடைக்கும் போது ஏர்போர்ட் உள்ளே 300 ரூபாய்க்கு விற்பது போல.

ஆகவே அந்த செயலை இயேசு கண்டித்தார்.

உங்கள் கேள்விக்கான பதில் அளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் எங்கள் Closed - Whatsapp குழுவில் இணைய அழைக்கிறோம்




** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக