#351 - *மத்தேயு, 23:23ம் வசனங்களை மேற்கோள்காட்டி தசமபாகம் கட்டாயம்
என கேட்கின்றார்கள் இதனை குறித்து விளக்கம் தாருங்கள்*
*பதில்* :
இவைகளையும் செய்ய வேண்டும் – அவைகளையும் விட்டு விடாதிருக்க
வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொன்னது பழைய நியமத்தையும் புதிய நியமத்தையும்
சேர்த்து சொன்னது அல்ல (!!) *தசமபாகத்தையும் - நீதியையும் இரக்கத்தையும் சேர்த்து
சொன்னார்*.
சிலுவைக்கு முன்னர் அவர் இந்த போதனையை சொன்ன போது புது நியமனம்
வரவே இல்லையே !! (எபி. 9:16-17)
இயேசு - சிலுவைக்கு முன்னர் முழுக்க முழுக்க நியாயபிரமானத்திற்கு
கீழ்பட்டவராக (கலா. 4:5) வாழ்ந்து 10+603 கட்டளைகளான நியாயபிரமானத்தை “நிறைவேற்றினார்”
(மத். 5:17).
எந்த மனுஷனும் 100 சதவீதம் தேவன் கொடுத்த மோசேயின் பிரமானத்தை
கடைபிடித்து வாழமுடியும் என்பதை நிரூபித்தார்.
நியாயபிரமானத்தை மீறினார் என்று பொய் சாட்சிகளை கிறிஸ்துவுக்கு
எதிராய் ஏவியும் கூட அவர்களாலேயே நிரூபிக்க முடியாமல் போனது (லூக். 23:14, 15, 22, மத். 26:60)
நியாயபிரமானத்தின்படி அவர் வாழ்ந்ததால் தான் – அவர் புறஜாதியாருக்கு
அல்ல இழந்து போனதை தேடவே வந்தேன் என்றார் (லூக்கா 19:10, மத். 15:24) புறஜாதியினிடத்திற்கு போக வேண்டாம் என்று தன் சீஷருக்கு
கட்டளையிட்டார் (மத். 10:5-6)
உயிர்த்தெழுந்தபின் அவர் சொன்னது – உலகமெங்கும் போய் *சர்வசிருஷ்டிக்கும்*
பிரசங்கியுங்கள் என்றார் (மத். 28:18-19)
பழைய நியமனமாகிய நியாயபிரமானத்தை *முழுவதுமாய்*
கடைபிடியுங்கள் என்று சிலுவைக்கு முன்னர் அவர் சொன்னதை – நம் மக்கள் *பழையதையும்
புதியதையும்* சேர்த்து தங்களுக்கு லாபமாக மாற்றி தசமபாகம் கொடுங்கள் + கிறிஸ்தவனாகவும்
நடந்து கொள்ளுங்கள் என்கின்றனர்.
புதியதோடு பழையதை இணைக்க முடியாது என்று கிறிஸ்து சொன்னார்
(லூக்கா 5:36)
நியாயபிரமானத்தில் ஒன்று மீறினாலும் அவன் சபிக்கபட்டவன்
என்பதை மறந்து போக வேண்டாம் (கலா. 3:10)
நாம் புதிய நியமனத்திற்கானவர்கள் – காணிக்கையை நிர்பந்தமாக
அல்ல மனப்பூர்வமாய் கொடுக்க வேண்டும்.
*புதிய
ஏற்பாட்டில் கொடுக்கப்படவேண்டிய காணிக்கை முறை*:
-
திட்டம் பண்ணி / சேர்த்து வைத்து கொடுக்க வேண்டும் 1கொரி. 16:1-2
-
தன் மனதில் நினைத்து வைத்தபடி கொடுக்க வேண்டும் 2கொரி. 9:7
-
மற்றவர் சொன்ன அளவின்படி கொடுக்க கூடாது 2கொரி. 9:7
-
வருத்தப்பட்டு காணிக்கை கொடுக்க கூடாது 2கொரி. 9:7, 1பேதுரு 4:9
-
இருப்பதில் இருந்து கொடுக்க வேண்டும், கடன்
வாங்கி கொடுப்பதல்ல 2கொரி. 8:12
-
பலவீனரை தாங்கும்படி கொடுக்கவேண்டும் அப். 20:35
-
வஞ்சனையில்லாமல் கொடுக்கவேண்டும் ரோ. 12:8
-
பரிசுத்தவான்களின் குறைவுகளை நிவிர்த்தி செய்யும் படி உதவவேண்டும்
ரோ. 12:13
-
எல்லோருக்கும் தெரியும்படி உதவிசெய்யகூடாது மத். 6:3
-
பரிபூரண சந்தோஷத்தோடு கொடுக்கவேண்டும் 2கொரி. 8:2
-
உற்சாகமாய் கொடுக்கவேண்டும் 2கொரி. 9:7
...இன்னும் பல
சொல்லிக்கொண்டே போகலாம்..
1- யோவான் ஸ்நானகன் – 50சதவீதம் கொடுக்க சொன்னார் – லூக்.
3:11
2- இயேசு 100சதவீதம் கொடுத்தவளை பாராட்டினார் – மாற்கு 12:43
10சதவீதம்
கொடுக்கவேண்டும் என்பது பழைய கட்டளை. சரியாய் சொல்லவேண்டுமென்றால் – இஸ்ரவேலர்கள்
ஆண்டிற்கு ஏறத்தாழ 33சதவீதம் கொடுத்தார்கள் !!
* தசமபாகம்
என்கிற பெயரில் ஊழியர்கள் சபையாரிடம் கேட்ககூடாது – அது வேதாகம சட்டவிரோதம்.
* ஊழியரையும், ஊழியத்தையும் தாராளமாக
தாங்கவேண்டியது – சபையாரின் கடமை.
* உதாரத்துவமாய், உற்சாகமாய், நிறைவாய் *சபையார் மாத்திரம் அல்ல ஊழியர்களும் காணிக்கையில்
முன்மாதிரியாக* பங்கெடுக்க வேண்டும்.
சபையாரிடம்
வாங்கி வாங்கி தன் சொந்த பைசாவை சேமிக்கக்கூடாது!!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
#356
பதிலளிநீக்கு*கேள்வி*
உங்கள் #351 கேள்விக்கான பதிவில் - 10 சதவீதம் கொடுக்கவேண்டும் என்பது பழைய கட்டளை.
1)
சரியாய் சொல்லவேண்டுமென்றால் – இஸ்ரவேலர்கள் ஆண்டிற்கு ஏறத்தாழ 33சதவீதம் கொடுத்தார்கள் !!
என்கிறீர்கள் இது எந்த வசனத்தின் அடிப்படையில் என சொல்லுங்கள் பிரதர்....
அப்புறம்
2)
யோவான் 50% கொடுக்க சொன்னாரா ? எங்கே ?
பதிலை சொல்லுங்கள் பிரதர்...
*பதில்* :
1)
மோசேயின் சட்டத்தின்படி இஸ்ரவேல் புத்திரர் மூன்று வெவ்வேறு தசமபாகங்களை செலுத்த வேண்டும்.
லேவியருக்கான தசமபாகம் (லேவி 27: 30-32; எண் 18: 21,24),
வருடாந்திர திருவிழா தசமபாகம் (உபா. 14: 22-27), மற்றும்
மூன்று ஆண்டு ஏழைக்கான தசமபாகம் (உபா 14: 28-29).
லேவியருக்கான தசமபாகம் – பொதுவாக நாம் விவாதிக்கும் நிலையிலான தசமபாகம்.
எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் வருமானத்தில் 10% (பயிர்கள், பழம், கால்நடைகள்) லேவியர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த தசமபாகம் ஆண்டு முழுவதும் அவ்வப்போது வழங்கப்பட்டது.
திருவிழா தசமபாகம் ஆண்டுதோறும் யூதர்கள் எருசலேமில் தேசிய பண்டிகைகளில் ஒன்றுக்காக கூடிவந்தபோது "செலுத்தப்பட வேண்டும்".
வழிபாட்டாளருக்கு தனது வருடாந்திர வருமானத்தின் 10% எருசலேமுக்கு எடுத்துச் செல்லவும், அதை அவரது குடும்பத்தினருடனும் லேவியர்களுடனும் சேர்ந்து திருவிழாவில் உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. அவைகள் விருந்து தானியங்கள், இறைச்சி மற்றும் பானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஏழைக்கான தசமபாகம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வழங்கப்பட்டது. திருவிழா தசமபாகத்தைப் போலவே, இந்த தசமபாகமும் லேவியர்கள் உட்பட மற்றவர்களுக்கு உணவளிக்கும் நோக்கம் கொண்டது.
எவ்வாறாயினும், பண்டிகை தசமபாகத்தைப் போலல்லாமல், எருசலேமில் அல்ல ஒருவரின் சொந்த நகரத்திற்குள் - உணவை புறஜாதியினருக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் அளிக்கும் நோக்கம் கொண்டது.
கடந்து போன மூன்று ஆண்டுகளுக்கான தசமபாகம் கொடுப்பதற்கு பதிலாக, இஸ்ரவேலர் ஏழை தசமபாகம் தேவைப்படும் ஆண்டிற்கான தனது வருமானத்தில் தசமபாகம் செய்ய வேண்டியிருந்தது.
இந்த தசமபாகங்கள் அனைத்தும் மூன்று வருட காலத்திற்கு எவ்வளவு சேர்க்கப்படுகின்றன? இது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதைப் பொறுத்தது.
லேவியருக்கான மற்றும் திருவிழா தசமபாகங்களை செலுத்தியபின் எஞ்சியிருந்ததை அடிப்படையாகக் கொண்டிருந்தால் ஏழைக்கான தசமபாகங்கள்முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஒவ்வொரு இஸ்ரவேலரும் தசமபாகத்தில் 19% செலுத்துவார்கள், மூன்றாம் ஆண்டு அவர்கள் சராசரியாக 27.1% செலுத்துவார்கள். ஆண்டுக்கு 21.7%. திருவிழா மற்றும் ஏழை தசமபாகம் ஒருவரின் மொத்த அதிகரிப்பு அடிப்படையில் அமைந்திருந்தால், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஒவ்வொரு இஸ்ரேலியரும் தசமபாகத்தில் 20% செலுத்துவார்கள், மூன்றாம் ஆண்டு அவர்கள் 30% செலுத்துவார்கள்.
*2) யோவான் 50% கொடுக்க சொன்னாரா? எங்கே*?
என்னுடைய #315 பதிவிலேயே நான் வேத வசனத்தை எழுதியிருந்தேன்.
வசனம் - லூக்கா 3:11 --- 2 அங்கி இருந்தால் 1 கொடுக்க சொன்னது !!
இது தசமபாகத்தை அல்ல – காணிக்கை / கொடுப்பதை பற்றியது.
*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com
*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் எங்கள் Closed - Whatsapp குழுவில் இணைய அழைக்கிறோம்
Group 3: (Newly opened) - https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
Group 2: (255 members) - https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
Group 1: (255 members) - https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*