திங்கள், 19 ஆகஸ்ட், 2019

#341 - உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும் - விளக்கவும்

#341 - *உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக(பிரசங்கி 9:8) மற்றும் #300ன் கேள்விக்கான உங்கள் பதிலையும் – மேலே உள்ள வசனத்தையும் ஒப்பிடவும்.

*பதில்* :
வெள்ளை என்பது எல்லா இடங்களிலும் - நிறத்தை மாத்திரமே அல்ல மாறாக அது சுத்தத்தை குறிக்கிறதாயிருக்கிறது.

ஆதாரமாக – வெளிபடுத்தல் புத்தகம் 7ம் அதிகாரத்தின் 13ம் வசனத்தில்  .. மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: *வெள்ளை அங்கிகளைத்* தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

14ம் வசனம் - .... இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய *இரத்தத்திலே* தோய்த்து வெளுத்தவர்கள்.

இரத்தத்தில் தோய்த்த துணி – எவ்வாறு வெள்ளையாக இருக்கும்?

மேலும் – கிறிஸ்துவின் வருகையில் பூமியானது முழுவதும் அழிக்கப்பட்டிருக்க (2பேது. 3:10) பரலோகத்தில் துணி எங்கே இருக்கும்?

ஆகவே வெள்ளை என்பது ஒரு ஒப்பனையான வார்த்தை.

புறம்பான வெள்ளையை அல்ல – வெள்ளையான அல்லது தூய்மையான இருதயத்தை தேவன் காண்கிறார் (மத். 23:27)

வேதாகமத்தை நாம் பொருள்பட படிக்கும் போது தான் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

 *எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக