செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

#342 - நடக்க இருப்பதை தம் ஊழியருக்கு தேவன் வெளிபடுத்துவாரா?

#342 - *நடக்க இருப்பதை தம் ஊழியருக்கு தேவன் வெளிபடுத்துவாரா?*

நடக்க இருப்பதை தம் ஊழியருக்கு வெளிபடுத்துவேன் என்று இயேசு சொல்லியிருக்கும் பதத்தில் – அவரின் இரண்டாம் வருகையும் தம் ஊழியருக்கு தெரியபடுத்துவாரா? இதை சொல்லி தான் பல சபைகளில் போதிக்கிறார்கள். ஆனால் பிதா ஒருவர் தவிர வேறு ஒருவரும் அறியார் என்று இயேசு சொல்கிறாரே. இதை எப்படி பார்ப்பது?  பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுன்னு பிரித்து பாக்கனுமா?

*பதில்* :
ஆமோஸ் 3:7ல் கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வாசிக்கிறோம்.

அந்த வசனத்தில் கர்த்தராகிய ஆண்டவர் என்பது இயேசு கிறிஸ்துவை அல்ல - பிதாவானவரை குறிக்கிறது.  (அப். 2:36, பிலி. 2:11)

ஆம் - அழிவிற்கு முன் தம்முடைய திட்டத்தை தேவன் வெளிப்படுத்துகிறார்.

எகிப்தின் அழிவிற்கு முன்பதாக – மோசேயின் மூலம் வெளிபடுத்தினார்.

வனாந்திரத்தில் இஸ்ரவேலருக்கு – மோசேயின் மூலம் வெளிபடுத்தினார்.

கானானில் இஸ்ரவேலருக்கு – யோசுவாவின் மூலம் வெளிபடுத்தினார் (யோசுவா 23:12-16, 24:19-20)

எருசலேம் நகரம் முழுவதுமாய் சின்னாபின்னமாக்கப்படும் என்று இயேசு கிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுத்தினார் – லூக்கா 19:42-44

அது போல – இந்த பூமியின் அழிவிற்கு முன் ஷனப்பொழுதில் வானத்தில் எக்காளத்துடன் அறிவிப்பு வரும் – வெளி. 8:2

அந்த அறிவிப்பின் போது யாரும் ஓடிப்போய் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள முடியாது. யா.ரும் ஒருவரிடம் மற்றொருவர் மன்னிப்பும் கேட்டுக்கொள்ள முடியாது (1கொரி 15:51)

ஆகவே கிறிஸ்துவானவர் - ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்ற அவசியமான யாவும் அப்போஸ்தலர் மூலமாக (அப். 1:3) வேதாகமத்தில் நமக்கு கொடுத்திருக்கிறார் – 2தீமோ. 3:16-17, யோ. 20:31, 2பேதுரு 1:3-4,

அவைகளை பற்றிக்கொண்டு, கீழ்படிந்து, பின்பற்றி வாழும்போது – அழிவிற்கு தப்பித்துக்கொள்வோம்.

ஆனால் – வேதாகமத்தில் இல்லாத புதிய கருத்துக்களை ஆண்டவர் சொன்னார், பிதாவானவர் சொன்னார், பரிசுத்த ஆவியானவர் சொன்னார் என்று யார் ஒருவர் சொன்னாலும் – அதற்கு பதில் கீழே வசனம் நமக்கு சொல்கிறது :

யோ. 16:14-15 அவர் *என்னுடையதில்* எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.  பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் *என்னுடையதில்* எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

கலா. 1:8 நாங்கள் உங்களுக்குப் *பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல்*, நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

யோ. 12:47-50 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; ….  என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். ... *நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்*.  .... ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் பகுத்து தான் படிக்க வேண்டும் / பகுத்து தான் போதிக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் உபதேசத்தை பின்பற்ற வேண்டும்.  (2தீமோ. 2:15, 1தீமோ. 1:7)

**** குறிப்பு வசனங்களை தயவு செய்து உங்கள் வேதாகமத்தை எடுத்து ஒப்பிட்டு படிக்கவும் ****

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக