செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

#322 - ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தலாமா?

#322 - *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தலாமா?*

ஆராதனையில் எல்லோரும் சபைகள் ஆர்கன் கிட்டார் மற்றும் டிரம்ஸ் வைத்து அடி பாடிக்கொண்டிருக்க சில சபைகள் இசை கருவிகள்  உபயோகபடுத்தக் கூடாதென்றும் பாடும் போது கைகளை தட்ட கூடாதென்றும் சொல்கிறார்களே – வேத வசன ஆதாரங்களோடு விளக்கவும்.


*பதில்* : ஆராதனை கூடங்கள் தற்போது ஆடல் பாடல் (Pub) பப்புகளை போல மாறிவிட்டது வேதனைக்குறியது.

தாவீது டான்ஸ் ஆடினார் என்று ஆதாரத்திற்கு சொல்வார்கள் (2சாமு. 6:14)

உண்மை தான் – ஆனால் அவர் ஆடியது – ஆராதனையில் அல்ல.  
அவர் கிறிஸ்தவரும் அல்ல.

நாம் மோசேக்கு அல்ல கிறிஸ்துவுக்கு கீழ்படிந்தவர்கள்.

மோசேயின் கட்டளைபடியல்ல கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியவேண்டும்.

புதிய ஏற்பாட்டில் கீழ்கண்ட வசனங்கள் பாடலை/இசையை குறித்து இருக்கிறது:

1- மத். 26:30 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப்பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள் (மாற்கு 14:26)

2- அப். 16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்

3- ரோ. 15:9 ... அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது

4- 1கொரி. 14:15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

5- எபே. 5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

6- கொலோ. 3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

7- எபி. 2:12 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;

8- யாக். 5:13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.

எந்த ஒரு இடத்திலேயும் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் புதிய ஏற்பாட்டில் சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் / ஆதி கிறிஸ்தவர்கள் பாடல் சம்பந்தபட்ட எந்த வசனத்திலும் – வாயினால் பாடினார்களேயன்றி, கைகளை தட்டியோ, இசை கருவிகளை மீட்டியோ பாடவில்லை.

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். எபி. 13:15

இசைக்கருவியை உபயோகப்படுத்தினால் என்ன பிரச்சனை என்று கேட்டால் – தேவனுடைய எந்த செய்கையையும் எப்படி செய்யவேண்டும் என்று திட்டமும் தெளிவுமாக அவர் கொடுத்ததை நாம் மாற்ற எந்த அதிகாரமும் எவருக்கும் இல்லை.

நெருப்பு தானே தேவை – அது எங்கிருந்து வந்தால் என்ன என்று நினைத்தால் தன் உயிரையே இழந்தார்கள் நாதாபும் அபியுவும் (எண். 3:4)

முதல் முறை மலையை தடியால் அடிக்க சொன்னார் – அடுத்த முறை மலையை பார்த்து பேச வேண்டும் என்று தேவன் சொல்லியிருந்தும் பழக்க தோஷத்தில் ஜனங்கள் மீது இருந்த கோபத்தில் மோசே மலையை அடித்து விட்டார். தண்ணீர் வந்தது உண்மை தான் !! ஆனால் அவரோ வாக்குத்தத்தை இழந்து போனார் (1-யாத். 17:6, 2-எண். 20:8-13)

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங். 2:11

தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். சங். 89:7

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபி. 12:28-29

உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். சங். 119:120

பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? எபி. 12:25

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Print Friendly and PDF

1 கருத்து:

  1. #333

    *கேள்வி*
    கேள்வி #322 ல் இசை, கைதட்டல் இருக்கக்கூடாது என்று சொன்னீர்கள்

    ஆனால் சங்கீதத்தில் இந்த வசனத்தின்படி என்ன அர்த்தம் ஐயா

    சங்கீதம், Chapter 150

    4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்É யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

    5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

    *பதில்* :
    இந்த அற்புதமான சங்கீதத்தின்
    முதல் 2வசனங்கள் ஏன் தேவனை துதிக்க வேண்டும் என்றும்;

    3-5 வசனங்கள் எப்படி துதிக்க வேண்டும் என்றும்;

    6ம் வசனம் யார் துதிக்க வேண்டும் என்று விவரிக்கிறது.

    நீங்கள் குறிப்பிட்ட 4-5ம் வசனங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் தகவல்:

    தேவனை எவ்வாறு புகழ்ந்து பேசுவது? வெறுமனே சுவாசிப்பது உண்மையான புகழ் அல்ல. இஸ்ரவேல் தேசத்துடனான தேவனின் பழைய உடன்படிக்கையின் கீழ் நியாயமான வழிபாடு எப்படி இருந்தது என்பதை இந்த சங்கீதம் விளக்குகிறது (சங்கீதம் 150: 3-5).

    இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வளவு உற்சாகமாகவும், எவ்வளவு ஆற்றலுடனும், உணர்ச்சியுடனும் தங்கள் கருவிகளை வாசித்து, தங்கள் கடவுளுக்காக நடனமாடியிருப்பர் என்பதைக் கவனியுங்கள்!

    அதே மாதிரியான அணுகுமுறையையும் ஆர்வத்தையும் இன்று நம் வழிபாட்டிற்கு கொண்டு வருகிறோமா?

    இன்று, இயேசுவின் இரத்தத்தால் ஆரம்பிக்கப்பட்ட உடன்படிக்கை, நம்முடைய நியாயமான வழிபாடு *முழு ஆயுள் தியாகம்* என்பதைக் காட்டுகிறது (ரோமர் 12: 1-2).

    கிறிஸ்துவில் இருக்கும் என் சகோதர சகோதரிகளிடையே - நான் அவரை குறித்து பாடும்போது என் இதயத்தின் கருவி உண்மையான மெல்லிசையை உருவாக்குகிறதா (எபேசியர் 5:19)?

    சங்கீதம் 150 ஐ நாம் கேட்க வேண்டிய கேள்வி "இன்று கிறிஸ்தவர்கள் கருவிகளைக் கொண்டு ஆராதிக்க வேண்டுமா" ?

    அந்த கேள்வி நிச்சயமாக கவனமாக படிப்பதற்கும் பரிசீலிப்பதற்கும் தகுதியானது.

    ஆம் அவர்கள் உபயோகித்தார்கள், சங்கீதம் 150: 3-5 வசனங்கள் அதை ஊர்ஜீதப்படுத்துகிறது.

    நியாயபிரமாணத்தின்படி - அந்தச் சட்டத்தில் பலிகள், உணவு கட்டுப்பாடுகள், ஒரு தனி ஆசாரியத்துவம், ஒரு பிரதான ஆசாரியன், எருசலேமில் நேரடியாக போய் ஏறெடுக்கும் ஆராதனை, சனிக்கிழமையை கடைபிடித்தல் (ஓய்வுநாள் வழிபாடு), பயண தூரம் மற்றும் வேலை செய்யும் கட்டுப்பாடுகள், கட்டாய தசமபாகம், பஸ்காவை ஆண்டுதோறும் கடைபிடிப்பது (கதவுகளில் ஆட்டுக்குட்டி இரத்தம் பூசுவது), பல விருந்து நாட்களை கட்டாயமாக கடைபிடிப்பது, அனைத்து ஆண் சிறுவர்களையும் கட்டாயமாக விருத்தசேதனம் செய்தல், நியாயபிரமான குற்றங்களுக்கான மரண தண்டனை, புறஜாதியினரோடு திருமணம் செய்யும் தடை இப்படி 613 கட்டளைகளையும் சேர்ந்வை பழைய ஆராதனை முறை..,!!!

    நாமோ கிறிஸ்தவர்கள்.
    கிறிஸ்துவின் புதிய கட்டளையின்படி பிதாவை ஆராதிக்கிறோம்.

    அப்போஸ்தலர்கள் / ஆதி கிறிஸ்தவர்கள் / புதிய ஏற்பாட்டின் ஆராதனை முறையை கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்றுகிறோம்.

    கழுத்துக்கு கீழேயிருக்கும் கிறிஸ்துவினுடைய சரீரமாகிய நாம் கழுத்துக்கு மேலேயிருக்கும் கிறிஸ்துவை தலையாக கொண்டதால் – அவர் மூளை எதை நமக்கு சொல்லியிருக்கிறதோ அதை பின்பற்றுகிறோம்.

    *Eddy Joel*
    Preacher – The Churches of Christ
    Teacher – World Bible School
    +968 93215440 / joelsilsbee@gmail.com

    -நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்:

    Group 2:
    https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

    Group 1:
    https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

    ** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    பதிலளிநீக்கு