#321 - *ஐயா, சபைக்கு செல்கிறவர்கள் டி.வி சீரியல் பார்ப்பது, சினிமா பார்ப்பது, சினிமா பாடல்கள் கேட்பது, பாடுவது தவறு என்று தெரியும், ஆனால் வேதத்தின் அடிப்படையில் பதில் சொல்லுங்கள்*
*பதில்* :
தொலைகாட்சியையோ சினிமாவையோ பார்ப்பதே பாவம் என்று பறைசாற்றின பெந்தேகோஸ்தே அமைப்பினர் கூட இப்போது தங்கள் விளம்பர ஆடம்பர நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் கொண்டு வந்து வசூல் வேட்டையை தொடங்கி வருடங்கள் போய்விட்டது !!
தன்னை பரிசுத்தவான் என்ற ஒருவர் டி.வி.டி (DVD) யை ஆண்டவர் கையிலிருந்து பரலோகத்துக்கு போய் பெற்றுக்கொண்டு வந்ததாக கதை விட்டார். இங்கு நடக்கிற அவர் நிகழ்ச்சிகளை அங்கு ஆண்டவர் (TV) தொலைகாட்சியில் பார்த்தாராம்.
அதுவும் நிகழ்ச்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது என்று ஆண்டவர் இவரிடம் சொன்னாராம் !! எவ்வளவு பொிய மெகா ஏமாற்று பேர்வழி என்பதை அப்பாவி ஜனங்கள் இன்னும் இப்படிபட்டவர்களை அடையாளம் காணாமல் இருப்பது பிசாசின் வெற்றி.
போதுமான அளவு பாலியல் சம்பந்தமான கற்பனையான சீர்கேடான காரியங்களையே சினிமாவும் தொலைகாட்சியும் ஒரு காலத்தில் ஒளிபரப்பிக்கொண்டிருந்ததால் அவைகளை பார்ப்பது சரியல்ல அது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் இந்த எதிர்ப்பு ஆரம்பத்தில் அரவே துவங்கினது.
இப்படி கற்பனையான பொய்யான தவறான சொந்த கருத்துக்களை தத்ரூபமாக சகலவற்றையும் மறந்து இருட்டறையில் உட்கார்ந்து முழு கவனத்தோடு சொந்த கண்களால் காதுகளால் கவனத்தோடு காணும்போது அதை அப்படியே தங்கள் வாழ்க்கையிலும் எண்ணங்களிலும் பின்பற்றுவதற்கு ஏதுவானது.
இப்போதோ – தொலைகாட்சியிலும் சினிமாவிலும் நாட்டு நடப்பு செய்திகள், சீர்கேட்டிற்கான சீர்திருத்தங்கள் மற்றும் அநேக வேதாகம செய்திகள் என்று பல வகையான பிரயோஜனமான நிகழ்ச்சிகள் நம் ஆத்மீக மற்றும் உலக அறிவை வளர்க்கும் கருவியாக மாறியுள்ளது.
ஒட்டு மொத்தமாக சினிமா அல்லது தொலைகாட்சியை பார்க்ககூடாது என்று ஒதுக்குவதை விட எதை பார்க்கிறோம் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பது தான் அவசியம்.
இந்த கால அடிபடையில் சொல்ல வேண்டுமென்றால், தொலைகாட்சி அல்லது சினிமாவை விட சொந்த கரங்களில் எப்போதும் வைத்திருக்கும் மொபைல் (Mobile) Phone அதைவிட மிக மிக ஆபத்தானது !! பலரது வாழ்க்கையையும் குடும்பத்தையும் சீரழித்து கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட் ஃபோன்களால் - ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் நண்பர்கள் / சகோதரர் என்றும் சகோதரி என்றும் ஆரம்பத்தில் பழக ஆரம்பித்து Good Morning, Praise the Lord என்று வசனங்களும் அனுப்ப துவங்கி பின்னர் காமெடி துணுக்குகள் பரிமாற ஆரம்பித்து இச்சையை தூண்டி கொண்டிருப்பது எவ்வளவு பொிய சீரழிவை நோக்கி நம் சமுதாயம் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது மிக கொடுமையான வேதனை.
இந்த ஆடம்பர கலாசாரத்திற்கு வெகு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைத்தாலேயன்றி – குடும்பங்களும் சமுதாயமும் சீரடையாது என்பது என் ஆழமான வேதனையான கருத்து.
எதை பார்க்கிறோம் – எதற்கு நம் கவனத்தை செலுத்துகிறோம் என்பதே முக்கியம்.
*சினிமாவில் காணாத ஆபாசம் இப்போது சாலையில் நடந்து போகும் போதே நேரிடையாக காணமுடிகிறது* !!
நாம் நன்மையானதை மாத்திரம் பற்றிக்கொள்ளவேண்டும்.
வேதாகம வசனம் சொல்கிறது –
சத்தியத்தை*யும்* அறிவீர்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று (யோ. 8:32)
*கவனிக்கவும்* –
சத்தியத்தை அறிவீர்கள் என்று சொல்லவில்லை –
சத்தியத்தையும் அறிவீர்கள் என்று சொல்கிறது வசனம்...
பலவற்றை நாம் அறியும் போது – சத்தியத்தையும் அறிகிறோம்..... ஆனால் நம்மை விடுதலையாக்குவது சத்தியமே என்று உணர்ந்து அதற்கு மாத்திரம் செவிகொடுக்கும் போது நமக்கு பரிசுத்தம் !!!
TV Reality Show பார்க்கலாம் பார்க்ககூடாது என்று யார் தடை போட்டாலும் மொபைலிலும் செய்தி தாளிலும் வரும் ஆபாசங்களும் தெருக்களில் காணும் ஆபாசங்களையும் சுவரொட்டிகளில் காணும் ஆபாசங்களையும் நம் கண்களிலிருந்து நாம் மறைக்கமுடியுமா? நம் சிந்தையே காரியம்...
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடந்து எவருக்கும் இடறலற்றவர்களாயிருப்போம். (1கொரி. 10:31-33)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக