வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

#313 *கேள்வி* ஒன்றுக்கு மேற்பட்ட முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பது சரியா? வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்

#313 *கேள்வி* ஒன்றுக்கு மேற்பட்ட முழுக்கு ஞானஸ்நானம்  எடுப்பது சரியா? வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்

*பதில்* :
(1)வசனத்தை கேட்டு -> (2)விசுவாசித்து -> (3)மனந்திரும்பி -> பாவத்தை அல்ல (4) விசுவாசத்தை அறிக்கையிட்டு -> *பாவமன்னிப்புக்கென்று* (5) ஞானஸ்நானம் எடுத்துக்கொண்ட எவரும் மறுபடியும் எடுத்துக்கொள்ள *மாட்டார்கள்*.  ஆதார வசனங்கள் : ரோ. 10:17, எபி. 11:16, அப். 17:30, ரோ. 10:10, அப். 2:38, 22:16

சத்தியத்தை அறியாமல் / உணராமல் / எதற்கு எடுக்கிறோம் என்று தொியாமல் / எங்கோ சத்தியமே இல்லாத இடத்தில் அறியாதவரிடத்தில் முழுகி எடுத்துக்கொண்டது ஞானஸ்நானம் அல்ல – அது வெறும் குளியல் சடங்கு தான். அதை அவர்களே சொல்லவும் செய்கிறார்கள் ... இது வெறும் சடங்கு என்று !!!

மறுபடியும் பிறவாவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று வேதம் எச்சரிக்கிறது (யோ. 3:3)

பிசாசு இந்த தந்திரத்தில் அநேகரை தன் வலையில் விழ வைத்து வெற்றி சூடிக்கொண்டே இருக்கிறான் – இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். (மத். 7:13)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக