வியாழன், 1 ஆகஸ்ட், 2019

#312 *கேள்வி* ஆராதனை கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்

#312

*கேள்வி*
ஆராதனை கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்
வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்

*பதில்* :

சபை - கிறிஸ்துவிற்கு சொந்தமானது.

கிறிஸ்து - தன் சபையை கட்டினார் (மத் 16:18)

புதிய ஏற்பாட்டில் – சபையின் பெயர்கள் கீழ்கண்டவாறு அழைக்கப்பட்டிருக்கிறது:

1-    கிறிஸ்துவின் சபை (ரோ 16:16)

2-    இடத்தின் பெயரை குறிப்பிட்டு .... தேவனுடைய சபை என்றும் (1கொரி 1:2)

3-    அல்லது இடத்தின் பெயரால் அழைக்கப்படும் சபை (எபேசு சபை, சிமிர்னா சபை..) கொலோ 4:16; 1தெச 1:1; 2தெச 1:1; வெளி 2:1; 3:14

மேலும் – கிறிஸ்தவர்களின் கூட்டத்தை – வேதம் கீழ்கண்ட வகையில் அழைக்கிறது :

4-    தேவனுடைய சபை – 1கொரி 10:32
5-    ஜீவனுள்ள தேவனுடைய சபை – 1தீமோ 3:15
6-    தேவனுடைய வீடு  – 1தீமோ 3:15
7-    முதற்பேறானவரின் சபை – எபி 12:23
8-    பரலோக இராஜ்ஜியம் – மத் 7:21
9-    தேவனுடைய இராஜ்ஜியம் – 1கொரி 4:20
10- தேவனுடைய இராஜ்ஜியமாகிய கிறிஸ்துவின் இராஜ்ஜியம் – எபே 5:5
11- அன்பின் குமாரனுடைய ராஜ்யம் – கொலோ 1:13
12- கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யம் (2பேது 1:11
13- கிறிஸ்துவின் சரீரம் – 1கொரி 12:27

மேலே சொல்லப்பட்டவைகளில் உள்ள எந்த பெயரையும் உபயோகபடுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து.

சபையானது – கிறிஸ்துவினுடையது என்பதை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும்.  மனிதனை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. சபையை கட்டியது கிறிஸ்து.


*Eddy Joel*
Preacher - Kaniyakulam Church of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக