#314 - *இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதற்கான
தெளிவான விளக்கத்தை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து கொடுங்கள் ஐயா* 🙏
*பதில்* :
சரீரபிரகாரமான தாயும் (மரியாள்) சகோதரரும் சகோதரிகளும் இயேசுவிற்கு
இருந்ததை அறிகிறோம் (யோ. 2:12, 7:5, லூக்கா 8:20, மாற்கு
6:3, மத். 12:48-49)
நாமனைவரும் ஒரு *ஆணின் வித்தினாலே* பிறந்தவர்கள்.
இயேசுவோ வாக்குதத்தம் பண்ணப்பட்டபடி அவர் ஆண் துணையில்லாமல்
*ஸ்திரீயின் வித்தாக* பிறந்தவர் (ஆதி. 3:15, ஏசா. 7:14, மத். 1:25,
லூக். 1:34-35, கலா. 4:5)
ஆகவே அவர் தேவ குமாரன் எனப்பட்டார் (மத். 14:33, 16:16, 17:5,
26:63, 27:43, 27:54; சங். 2:7; தானி. 3:25;
மாற்கு 1:1, 14:61, 15:39; லூக்கா 4:41,
8:28; யோ. 1:49, 6:69, 9:35-38, 11:27, 17:1, 19:7; அப். 8:37; ரோமர் 1:5)
திருச்சபையானது கிறிஸ்துவுக்கு மணவாட்டி என்று வேதம் சொல்கிறது
- எபே. 5:23, வெளி. 21:9-10 )
நம்மை போல ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்யவில்லை. கலியாணம்
செய்து கொண்டு குடும்படும் குடித்தனமுமாக வாழ அவர் பிறக்கவில்லை – அவர் இந்த
உலகத்தில் மாம்சத்தில் வந்த நோக்கமே சமாதான பலியாக அடிக்கப்பட்டு பாவத்திலிருக்கும்
நம்மனைவரையும் பிதாவாகிய தேவனிடத்தில் சேர்ப்பதே (எபே. 5:2, ரோ. 8:3)
சபை என்பது பன்மையில் அல்ல – ஒருமையில் இருக்கிறது. அது
கிறிஸ்துவின் மனையாட்டி, கிறிஸ்துவின் வார்த்தையை மாத்திரம்
கடைபிடிக்கும் மனைவி அவள் (நாம்)
இது ஒரு ஒப்பனையாக சொல்லப்பட்டவை.
பலராக இருக்கும் நாமனைவரும் ஒரு சரீரம் என்று வேதம் சொல்கிறது
(கொலோ. 3:15, 1:24)
அந்த சரீரத்திற்கு கிறிஸ்து தலையாக இருக்கிறார் (எபே. 4:15, 1:23)
பக்கத்தில் நிற்பவரின் தலை சொல்வதை/உணர்த்துவதை என் சரீரம்
எப்படி புரிந்து கொள்ளாதோ – கிறிஸ்து சொல்லாததற்கு நம் சரீரமும் (எந்த கிறிஸ்தவர்களும்)
கீழ்படியாது. போப் சொல்வதற்கும் பிஷப் சொல்வதற்கும்
மற்ற மனிதர்கள் சொல்லும் வேதத்தில் இல்லாத சொந்த போதனைக்கும் நம் சரீரம் கீழ்படிந்தால்
– தலை கிறிஸ்து அல்ல என்பதை நாமே தொிந்து கொள்ளலாம் !!
இந்த அருமையான கேள்விக்காய் நன்றி
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக