புதன், 31 ஜூலை, 2019

#302 *கேள்வி* பிலேயாம் பாகாலின் ஊழியனா அல்ல கர்த்தரின் ஊழியனா? அந்நிய தேசத்தை சேர்ந்த இவன் கர்த்தரை அறிந்து இருந்தனா?

#302 *கேள்வி* பிலேயாம் பாகாலின் ஊழியனா அல்ல கர்த்தரின் ஊழியனா?
அந்நிய தேசத்தை சேர்ந்த இவன் கர்த்தரை அறிந்து இருந்தனா?

*பதில்* :
இஸ்ரவேலன் அல்லாத அந்நிய தேசத்தில் உண்மையான தேவனை எவ்வாறு பிலேயாம் அறிந்து கொண்டான் என்ற தகவல் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை. மெல்கிசேதேக் மற்றும் மோசேயின் மாமனார் எத்திரோ எவ்வாறோ, அவ்வாறே இந்த அறிமுகமும்.

தேவனுடைய வல்லமையையும் அவரோடு அவனுக்கு தொடர்பு இருந்ததையும் ஆதாரமாக காணமுடிகிறது (எண். 22:8)

பிலேயாம் சொல்வது வாய்க்கிறது என்பதை அநேகர் அறிந்திருந்தார்கள் (எண். 22:6)

தேவனுடைய வார்த்தைக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயம் இருந்த போதும் பணத்தாசை அவனை பற்றியிருந்ததால் தந்திரமாக இஸ்ரவேலரை தவறான பாதைக்கு இழுத்துவிட்டாலும் தன் ஜீவனை இழந்து போனான் (எண். 31:15-16, எண். 25:1-3; எண். 31:8)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக