புதன், 31 ஜூலை, 2019

#303 - பரிசுத்தம் என்றால் என்ன? சபைக்கு செல்கின்ற நாம் பரிசுத்தமாய்ய் இருப்பதை எப்படி உணர்ந்துக்கொள்ள முடியும்?

#303 - *பரிசுத்தம் என்றால் என்ன? சபைக்கு செல்கின்ற நாம் பரிசுத்தமாய்ய் இருப்பதை எப்படி உணர்ந்துக்கொள்ள முடியும்?*

*பதில்* :

*காதாஷ்* என்ற எபிரேய வார்த்தைக்கு
பரிசுத்தம்
அசுத்தத்திலிருந்து பிரித்தெடுத்தல்
புனிதம்,
தயார்,
அர்ப்பணிப்பு,
புனிதமாக இருத்தல்,
பரிசுத்தமாக இருத்தல்,
பரிசுத்தமாக்குதல்,
தனித்தனியாக இருத்தல் என்று அர்த்தமுள்ளது.

பரிசுத்தத்தின் எதிர் பதம் அசுத்தம் அல்லது தீட்டானவை (லேவி. 10:10)

இந்த காதாஷ் என்கிற பதத்தில் பழைய ஏற்பரட்டில் ஏறத்தாழ 600முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்தபட்ட அநேக இடங்களில் *பிரித்தெடுத்தல்* என்கிற அர்த்தத்திலேயே வருவதை காணமுடியும் (யாத். 28:43, 29,30)

மற்ற இடங்களில் அந்த வார்த்தை – தன்மையை அல்லது குணாதிசயங்களை குறிப்பதாய் உள்ளது.

தேவனுடைய நாமமே பரிசுத்தம் என்று சொல்லப்படுகிறது (லேவி. 20:3, 22:2)

தேவன் பரிசுத்தம் – அவர் நாமம் பரிசுத்தம்.

உலகத்தில் உள்ள எந்த பொருளாலும் நாம் பரிசுத்தப்பட முடியாதாகையால் – தேவன் ஒருவரே எவரையும் பரிசுத்தப்படுத்தமுடியும். (யாத். 29:43, லேவி. 20:8)

நம்மை நாமே நிதானித்து கர்த்தருடைய வார்த்தையை நம் அனுதின செயலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் பரிசுத்தப்பட்டிருக்கிறோமா (தேவனுக்கென்று பிரிக்கப்பட்டிருக்கிறோமா) என்று அறியமுடிகிறது.

பரிசுத்தம் என்பது ஒரு முறை செயல் அல்ல. கடைசி மூச்சு இருக்கும் வரை நம்மை பரிசோதித்துக்கொண்டே இருக்கும் ஒரு செயல்.

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.  நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுது கொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். 1பேதுரு 1:15-17

தேவனுடைய கட்டளையை விட்டு மனுஷனுடைய கற்பனைகளை சார்ந்து இருந்தால் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களாக / பரிசுத்தவான்களாக இருக்கமுடியாது. (லேவி. 20:26, ரோ. 1:2, 1கொரி. 1:2)

தயவு செய்து ஆதார வசனங்களை வாசித்து ஒப்பிட்டு பார்க்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக