#289 - *பழைய ஏற்பாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை அனுமதித்த கடவுள் கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு காலத்தில் மாத்திரம் ஏன் ஒரே ஒரு மனைவி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது?*
*பதில்* :
பழைய ஏற்பாட்டில் பல மனைவிகளைக் கொண்டிருப்பது நடைமுறையில்
இருந்தது என்ற உண்மையை பதிவு செய்கிறது.
ஆனால் அந்த நடைமுறையை மகிமைப்படுத்தவோ அல்லது வெற்றியின்
அளவாகப் பயன்படுத்தவோ இல்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடையவரின் வாழ்க்கை எவ்வாறு
பிரச்சனைகளை உருவாக்கியது என்று நாம் அறிய வேண்டும்.
*உதாரணத்திற்கு*:
ஆபிரகாமின் மனைவி சாராளும் மறுமனையாட்டி ஆகாரும் தொடர்ந்து சண்டையோடு
வாழ்ந்தார்கள் (ஆதியாகமம் 16: 4-6;
21: 9-10).
சகோதரிகளாக இருந்த இரு மனைவிகளுக்கிடையில் பொறாமை மற்றும்
போட்டியை யாக்கோபு சமாளிக்க வேண்டியிருந்தது (ஆதியாகமம் 29:32; 30: 16-18).
மேலும்,
யாக்கோபு தன் மனைவிகளை சமமாக நடத்தவில்லை (ஆதியாகமம் 29: 30-31).
சாலொமோனின் மனைவிகள் அவரை தேவனுடைய பாதையில் இருந்து விலக்கினார்கள்
(I இரா.
11: 1-6).
தேவன் தடைசெய்ததை மனிதகுலம் பெரும்பாலும் கடைப்பிடிக்கிறது.
மனிதனின் சுய இஷ்டமான எண்ணங்களை தேவன் அங்கீகரிப்பார் என்று
எதிர்பார்ப்பது தவறு.
"இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தர் விவாகரத்தை / தள்ளிவிடுதலை வெறுக்கிறார் என்று கூறுகிறார் மல்கியா
(மல்கியா 2:16).
வெறுத்தபோதும் அதை தேவன் அனுமதித்தார். “உங்கள் மனைவிகளைத்
தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. (மத்தேயு 19: 8).
ஆதியிலே தேவன் ஒருவனுக்கு ஒருத்தியை தான் உண்டாக்கினார்
(ஆதி. 2:24, மத். 19:4-6, எபே. 5:31)
புருஷன் மனைவி என்று ஒருமையை தான் கிறிஸ்துவும் பிதாவும் பயன்படுத்துவதை
கவனிக்க வேண்டும்.
1கொரி. 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த
மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
மனைவி உயிரோடிருக்கும் போது வேறொவரை திருமனம் செய்பவர் மற்றவர்களுக்கு
கர்த்தருடைய வார்த்தையை போதிக்கும் அதிகாரம், சபையை மேய்க்கும் அதிகாரம், சபையை நடத்தும் அதிகாரம் என்று முன்னதாக நிற்கும் தகுதியை இழக்கிறார்கள்
!! 1தீமோ. 3:2, 12, தீத்து 1:6.
ஆதியிலும் சரி இப்போதும் சரி தேவனுடைய வார்த்தை – ஒருவனுக்கு
ஒருத்தி தான்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக