#288 – *ஆடுகளுக்கு வேதாகமத்தில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு முதலாவது ஏன் கிறிஸ்துவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது*?
*பதில்* : ஆடுகளைப் பற்றிய குறிப்புகள் வேதாகமம் முழுவதும் உள்ளது.
செம்மறி ஆடுகள் பெரும்பாலும் பலியிடப்படும் விலங்குகளாகப் பயன்படுத்தப்பட்டன. எண். 28:4
தேவ ஜனங்களை ஆடுகளாக அடையாளப்படுத்தப்படுவதை காணமுடிகிறது. மத் 25:32
இயேசு கிறிஸ்துவும் தேவாட்டுக்குட்டி என்றழைக்கப்படுகிறார். யோ 1:29; 1 பேதுரு 1:19.
எபிரேய வார்த்தையின்படி ஆதி 4:4ல் வரும் மந்தை என்ற சொல் ஆடுகளைக் குறிக்கிறது.
இஸ்ரவேலரை ஆடுகளுடன் ஒப்பிடுவதை கவனிக்கமுடிகிறது. எசே 34; மத் 10:6; 15:24.
தேவ ஜனங்கள் பல காரணங்களை முன்னிட்டு ஆடுகளுடன் ஒப்பிடப்படுகிறார்கள். சங் 79:13; 100:3.
ஆடுகளின் தன்மைகளைக் காணும்போது - பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியும்.
*முதலாவதாக* :
ஆடுகள் தற்பாதுகாப்பு அமைப்பு இல்லாத விலங்கு.
மேய்ப்பன் இல்லாமல் செம்மறி ஆடுகள் சிதறிப்போகக்கூடியவை. மத் 9:36; எண். 27:16
23ம் சங்கீதத்தின் முதல் வசனம் - இந்த அற்புதமான உண்மையை பிரதிபலிக்கிறது.
செம்மறி ஆடுகள் திசை உணர்வு அறியாதவை.
தன்னை யார் வழிநடத்தினாலும் அவரை பின்பற்றும் தன்மை கொண்டவை.
முன்னதாக செல்லும் ஆடு எதை செய்கிறதோ அதையே பின்வரும் ஆடுகளும் செய்யும் தன்மை கொண்டவை.
முன்னதாக செல்லும் ஒரு ஆடு ஒரு இடத்தில் குதித்து சென்றால் பின்வரும் ஆடும் குதித்தே செல்லும் !!
*இரண்டாவதாக*:
செம்மறி ஆடுகளால் தங்களை பாதுகாக்க தெரியாது.
தனக்கு ஒரு ஆபத்து என்றால் அது ஓடிவிடும். எதிர்த்து போராடவோ, கூச்சலிடவோ, பற்களை கடிக்கவோ, ஒரு பூனை தன் கோபத்தை வெளிப்படுத்த ரோமங்களை சிலிர்த்து காண்பிப்பது போல கூட ஒரு ஆட்டிற்கு தன் கோபத்தை வெளிப்படுத்த தெரியாது.
*மூன்றாவதாக*:
ஆடுகள் உணர்ச்சி மிகுந்தவை. தன் மேய்ப்பனின் குரலை எப்போதும் அங்கீகரிக்கிறது.
தங்கள் மேய்ப்பனின் குரலை அறிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க உள்ளுணர்வு இருக்கிறது.
அவை உணர்ச்சிகரமான விலங்குகள் என்பதால், அந்நியர்களைக் கண்டறிய முடியும். ஆச்சரியப்படும் விதமாக, ஆடுகள் அந்நியரின் குரலுக்கு அஞ்சி தப்பி ஓடும்.
மற்ற ஆடுகளுடன் நட்பை வளர்த்துக் கொள்ளும் திறனும், சண்டையில் ஈடுபடும்போது ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்வதும் உண்டு.
*நான்காவது*:
ஆடுகள் சுமை சுமப்பதற்கானது அல்ல.
ஆடுகள் சுமையை ஒரு நாளும் சுமக்காது.
*ஐந்தாவது*:
ஆடுகள் மதிப்புமிக்கவை. தோல், ரோமம், பால், கறி என்று அனைத்துமே எப்போதும் உதவக்கூடியவை.
மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய பல தியாகங்களை செய்தனர்.
யோவான் ஸ்நானகன் இயேசுவைக் கண்டதும், “இதோ, உலகின் பாவத்தை நீக்குகிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்றார்.
இன்னும் இப்படி அடுக்கிகொண்டே போகமுடியும்.
சபையை எச்சரிக்கையாக இருக்கும்படி பேதுரு இப்படியாக எச்சரித்தார்.
1Pe 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8.
சிங்கம் மந்தையைத் தாக்காது. தனி ஆட்டுக்குட்டி மேய்ப்பரிடமிருந்து வெகு தொலைவில் பிரிந்து வரும் வரை அது காத்திருக்கிறது. இயேசுவின் மிகவும் பிரபலமான உவமைகளில் ஒன்று, வழிதவறிய ஆட்டுக்குட்டியைப் பற்றியது. நல்ல மேய்ப்பனாகிய இயேசு தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமல் போன ஒரு ஆட்டுக்குட்டியைத் தேடினார். லூக் 15:2–17.
மேலும்,
ஒரு குடும்பத்தில் இளைய குழந்தைக்கு பெரும்பாலும் ஆடுகளை வளர்ப்பதற்கான வேலை ஆரம்ப நாட்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1 சாமு 16: 11-13.
ஆடு மேய்ப்பவர்கள் மிகவும் அற்பமானவனாவர்களாகக் கருதப்பட்டார்கள். 1சாமு 16:11, 7-10, லூக்கா 2:8-15. புதிதாகப் பிறந்த உலக ராஜாவின் செய்தியை அரண்மனை அல்லது எருசலேம் தேவாலயத்திற்கு தேவன் அனுப்பியிருக்க முடியும். அதற்கு பதிலாக, ஆடுகள் நிறைந்த வயலுக்கு ஆட்டுக்குட்டியின் வருகையை அறிவித்தார். ஜனங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். உபா 10:18, 1கொரி 3:18-20
இயேசு ஒரு ஆட்டுக்குட்டியுடன் பெரும்பாலும் ஒப்பிடப்படுகிறார், ஏனெனில் அவர் சாந்தகுணமுள்ளவர், பயமுறுத்த அறியாதவர் (யோவான் 1:29, 36; ஏசாயா 53:7). பரலோகத்தில் கூட, கர்த்தருடைய நாள் வரும்போது, இயேசு ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படுவதை கவனியுங்கள். வெளி 5:12; 13:8. ஆனால் ஒரு முரண்பாடான திருப்பமாக, ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படுபவர், அவரை எதிர்க்கிற அனைவரையும் அழிக்க சிங்கம் போல அவருடைய கோபத்தை ஊற்றுகிறார். வெளி 6:16; 14:9–11.
மேலே சொன்னது போல - திசை தெரியாமல் இல்லாமல் - வேதத்தை பற்றினவர்களாகவும்,
எவரையும் பின்பற்றும் தன்மையை ஆடு கொண்டிருந்தாலும் தன்னுடைய சொந்த மேய்ப்பனை அடையாளங்கண்டு மோசேயை அல்ல கிறிஸ்துவை மாத்திரமே பற்றிக்கொள்ளும் தன்மையையும் கர்த்தருக்கு பிரியமான ஆடுகளாக கர்த்தரையே சார்ந்திருப்போம்.
ஆடுகளை குறித்து இன்னும் ஏராளம் உண்டு. அனைத்துயும் எழுது எனக்கு சமயம் போதாது. ஆடுகளை குறித்த முக்கியமானவைகளை மேலே குறிப்பிட்டுள்ளது போதுமானது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக