#290 - *அபிஷேகம் என்றால் என்ன?*
*பதில்* :
அபிஷேகம் என்ற வடசொல்லுக்கு திருமுழுக்கு என்பது தமிழ் வார்த்தை.
எண்ணையினால் குளித்தல் என்பதும் இதில் அடங்கும்.
அபிஷேகம் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் தமிழ் வேதாகமத்தில் 7 (ஏழு) இடங்களில் வருகிறது. அந்த வசனங்களை கீழே பதிவிடுகிறேன்.
1- கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் (Luke 4:18)
2- ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள் (Acts 4:28)
3- நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். (Acts 10:38)
4- உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே (2Cor. 1:21)
5- நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; (Heb. 1:9)
6- நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். (1Jn. 2:20)
7- நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. (1Jn. 2:27)
*ஆங்கில வேதாகமத்தில்* அனாய்ன்டிங் என்றும்
- அலைஃபோ / எபிக்ரீயோ / எங்க்ரீயோ / க்ரிஸ்மா / என்று கிரேக்க பாஷையிலும் கீழே உள்ள வசனங்களும் புதிய ஏற்பாட்டில் வருகிறதை கவனிக்கவும்.
*எண்ணைய் / தைலம் பூசி / சுகந்த வர்க்கம் இடும்படி / கலிக்கம்* :-
மத். 6:17, மாற்கு 6:13, 14:8, 16:1, லூக்கா 4:18, 7:38, 7:46, யோ. 9:6, 9:11, 11:2, 12:3, அப். 4:27, 10:38, 2கொரி. 1:21, எபி. 1:9, யாக். 5:14, 1யோ. 2:27, வெளி. 3:18 ஆகிய வசனங்களில் காணமுடியும்.
தற்போது உள்ளது போல மருந்து மாத்திரைகள் ஆதி காலங்களில் இல்லாததால் எண்ணையை ஆரோக்கியத்திற்கென்று புண்கள் குணமடைய உபயோகப்படுத்தினார்கள். (லூக்கா 10:34)
மேலும் தேவனுடைய வேலைக்கென்று ஒருவரை நியமிக்கும் போது எண்ணையை அவன் தலையில் ஊற்றுவது வழக்கமாக இருந்தது (யாத். 28:41)
இராஜாக்களையும் அவ்வாறு நியமித்தார்கள் (1சாமு. 10:1)
புதிய ஏற்பாட்டின் காலத்தில் தேவனால்,
கிறிஸ்தவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்லது அபிஷேகிக்கப்பட்டவர்கள் அல்லது ஆசாரியராக்கப்பட்டவர்கள் (1பேதுரு 2:9, வெளி. 1:6, 5:10, 20:6) *நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச்* சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். (1யோ. 2:20) என்று வேதம் சொல்கிறது.
** குறிப்பாக : ஊழியம் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளில் *வாழ்க்கை முறையை தகுதியாக சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி வரங்களையுடையவர்கள் தான் மூப்பராகவோ கண்காணியாகவோ ஊழியனாகவோ நியமிக்கப்படவேண்டும் என்று வசனங்களில் வராதது ஆச்சரியமே* !!! (1தீமோ. 3, தீத்து 1ம் அதிகாரங்கள்)
ஆரோனைப் போல அழைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படும் வசனம் (எபி. 5:4) அபிஷேகிக்கப்பட்ட ஊழியர்கள் என்பதல்ல; மாறாக அந்த வசனம் பிரதான ஆசாரிய நியமனத்தை குறிக்கிறது (எபி. 5:1, 5). அந்த முறையில் கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் ஆரோனை போல அழைத்து மெல்கிசேதேக்கின் முறையில் நிரந்தர பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்துவை ஆக்கினார் (எபி. 5:10)
கிறிஸ்தவர் அனைவரும் அழைக்கப்பட்டவர்கள், அபிஷேகிக்கப்பட்டவர்கள் அல்லது தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டபவர்கள்.
*அபிஷேகம் என்ற பெயரில் யாரையும் இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் தனியாக ஊழியத்திற்கென்று தேவன் நியமிப்பதில்லை*. அவரவர் தான் பெற்ற இரட்சிப்பை மற்றவருக்கு சொல்ல வேண்டிய கடமை பெற்றிருக்கிறார்கள் (1கொரி. 9:16)
இருந்த போதிலும், சகலத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு முழுவதுமாக தேவ காரியங்களையே பறைசாற்றும் ஊழியர்களை தேவன் கனம் பண்ணுகிறார். அவர்களை அவர் போஷிக்கிறார். மேன்மை படுத்துகிறார் (யோ. 12:26)
தேவனுக்கு ஊழியம் செய்யாத சாதாரண பறவைகளுக்கே அன்றன்றுள்ள ஆகாரத்தை நான் கொடுத்திருக்க எனக்கு ஊழியம் செய்பவர்களை நான் கைவிடுவேனோ என்று சவால் விடுகிறார் நம் சர்வ வல்லமையுள்ள தேவன் - அல்லேலூயா !! (மத். 6:24-26)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக