*#287 - *உடன்படிக்கை பெட்டி இப்போது பூமியில் உள்ளதா அல்லது
பரலோகத்தில் உள்ளதா தேவ வசனத்தின் அடிப்படையில் விளக்கம் தரவும்?*
*பதில் :*
உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலருக்கு தேவ பிரசன்னத்தை
நினைவூட்டுவதாக இருந்தது.
சீனாய் மலையிலிருந்து மோசே கொண்டு வந்த இரண்டு கற்பலகைகள் அதில்
இருந்தன.
ஒருபோதும் கெட்டுப்போகாத மன்னாவின் தங்கப் பாத்திரம், மற்றும்
ஆரோனின் தளிர்த்த கோலும் அதில் இருந்தது (எபிரெயர் 9: 4).
அந்த பெட்டியின் அமைப்பை யாத். 25:17-22 வசனங்களில் படித்து
தெரிந்து கொள்ளவும்.
அங்கே தேவன் மோசேயோடு உறையாடுவார். கிருபாசனத்தின்மீதிலும்
சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான்
இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே
சொல்லுவேன். யாத். 25:22, எண். 7:89
பிரிந்து போன இஸ்ரேல் தேசம் (வடக்கு மற்றும் தெற்கு) அடிமைதனத்திலிருந்து
வெளியே வந்து மீண்டும் ஒரு தேசமாக
உருவாகும் என்று எரேமியா முன்னறிவித்தார்.
அப்போது தேவனுடனான உடன்படிக்கையை மக்களுக்கு நினைவூட்ட
வேண்டிய உடன்படிக்கை பெட்டி இனி அவசியபடுவதில்லை என்று வரப்போகிற மேசியாவின் நாட்களை
வெளிபடுத்துகிறார் (எரே. 31:13-18)
பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருமென்ற கிறிஸ்துவின்
வார்த்தையை நாம் நினைவில் கொள்ள வேண்டும் (யோ. 4:21-24).
புதிய உடன்படிக்கையின் கீழ் தொழுகையானது வெகுவாக மாறும்
என்று இயேசு சமாரியப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சரீரத்தின் அடிப்படையில்
அல்ல பதிலாக அது ஆவிக்குரியதாக இருக்கும்.
புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என்று எரேமியாவும் வெளிபடுத்தினார்
(எரே. 31:33-34)
புதிய உடன்படிக்கையின் பங்காக இருக்கும் ஒவ்வொருவரும் /
அனைவரும் தேவனுடைய சட்டத்தை / சத்தியத்தை அறிந்து
கொள்கிறார்கள்.
கல்லில் எழுதப்பட்டு ஒரு பெட்டியில் அடைக்கபட்ட பிரமாணத்திற்கு
பதிலாக, ஜனங்கள்
தங்கள் இருதயத்தில் தேவனுடைய பிரமாணத்தை தாங்கி செல்வார்கள் (1 கொரி. 3:16)
இதன் விளைவாக,
உடன்படிக்கை பெட்டி அவசியமில்லாமல் போகும் / ஜனங்களுக்கு கிடைக்க வேண்டிய
அவசியமில்லை என்பதை எரேமியா தீர்க்கதரிசனத்தின் மூலம் அறிகிறோம்.
உண்மையில் அந்த பெட்டி எங்கு போனது என்று ஒருவரும்
அறியார்கள் !!
சிறைபிடிப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலர்களிடம் தேவாலயத்தின்
சில பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது (எஸ்ரா 1:
7)
அந்த நாளில் - உடன்படிக்கை பெட்டியை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை
என்றாலும், எருசலேமிலிருந்து
நேபுகாத்நேச்சார் அகற்றப்பட்டவற்றின் விரிவான பட்டியல்கள் கொடுக்கபட்டுள்ளன. இருந்த
போதிலும் உடன்படிக்கை பெட்டியை குறித்த தகவல் எதுவும் இல்லை.
இயேசுவின் நாட்களில் அது ஆலயத்தில் இருந்தது என்று எவரும் கருதுவாரானால், 70 கிபி யில் எருசலேம்
அழிக்கப்பட்டு ஆலயம் முழுவதுமாக இடிந்து விழுந்ததை நாம் மறுக்க முடியாத வரலாறு.
ரோமர்கள் விளக்கு தன்டை எடுத்துச் சென்றது வரலாறில்
அறியமுடியும். அதோடு கூட மற்ற எல்லா பொருட்களும் எடுக்கப்பட்டிருக்கலாம்.
எனினும் பாபிலோனிய சிறைப்பிடிக்கப்பட்ட நேரத்தில்
எடுக்கப்பட்டதா அல்லது எருசலேமின் அழிவின் போது அழிக்கப்பட்டதா என்பது
அனுமானத்திற்குரிய விஷயமே.
மோசே செய்த வெண்கல பாம்புக்கு என்ன கதி ஆனதோ அது போல இந்த
நாட்களில் அந்த பெட்டி இருந்திருந்தால் அதையும் ஒரு பொிய விக்கிரகமாக்கி
விட்டிருப்பார்களே...
புதிய உடன்படிக்கையின் கீழ் நாம் இருப்பதால் – அந்த பெட்டியை
பற்றிய கவலை கிறிஸ்தவர்களுக்கு இல்லை.
மேலும் பெட்டியை குறித்து வெளிப்படுத்தல் 11:19ல் சொல்லப்பட்ட
வசனம் தேவ பிரசன்னத்திற்கான அடையாளமேயன்றி – பெட்டி பரலோகம் போய்விட்டது என்று அர்த்தமல்ல.
வெளிபடுத்தல் புத்தகம் – அடையாளங்களால் நிறைந்தது என்பதை நாம் எப்போதும் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக