திங்கள், 22 ஜூலை, 2019

#286 - பல வருடங்களாக இயேசு திரும்பவும் வருவார் என்று சொல்லப்படுகிறதே. அவர் திரும்பவும் வரும் பட்சத்தில் – நான் தான் இயேசு என்று அவர் சொல்லும் போது ஜனங்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா?

#286 - *பல வருடங்களாக இயேசு திரும்பவும் வருவார் என்று சொல்லப்படுகிறதே. அவர் திரும்பவும் வரும் பட்சத்தில் – நான் தான் இயேசு என்று அவர் சொல்லும் போது ஜனங்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா?*

*பதில் :*
அவருடைய முதலாவது வருகையை போல இரண்டாவது வருகையில் குழந்தையாய் பிறந்து நம் கூட வாழ்ந்து ஜனங்களுக்கு போதிக்க போவதில்லை.

*அவர் இரண்டாவதாக வரும் போது ஜனங்கள்:*

* அவரை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவகாசமிருக்காது !!

* அவரை அடையாளங் கண்டு கொள்ள வேண்டிய அவகாசமிருக்காது !!

* அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டிய அவகாசமிருக்காது !!

* அவர் குழந்தையாக அல்ல – நியாதிபதியாக, வல்லமையில் அநேக தூதர்களோடும் வெளிபடுவார்.

அவர் வெளிப்பட்ட அடுத்த ஒரு (நொடியில்) சஷனத்தில் தானே ஒரு இமைபொழுதில் எல்லாம் முடிவுக்கு வந்து விடும். இந்த பூமி அழிந்து போகும்.

ஏற்கனவே மரித்தவர்கள் *அனைவரும்* புதிய சரீரத்தை பெற்று உயிரோடு எழுந்திருப்பார்கள்.

உயிரோடு இருப்பவர்களும் இப்போதிருக்கும் சரீரம் மாற்றப்பட்டு புதிய சரீரத்தை பெற்றுக்கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போவார்கள் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்).

பின்பு நியாயதீர்ப்பு உண்டாகும் !!

ஆகவே - அவர் வருவதற்கு முன்னர் நாம் ஞானஸ்நாம் பெற்று அவருடைய கட்டளையின்படி கீழ்படிந்து / வாழ்ந்து எப்போதும் தயாராக இருப்போம்.

*ஆதார வசனங்கள் கீழே:*
1தெச. 4:15-17  ---- கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.  ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

1கொரி. 15:51-54 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.  எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.  அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.  அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

2பேதுரு 3:12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக