#285 - *சர்ச்சுக்கு வரும்போது கையில் வேதாகமம் கொண்டு வராமல் மொபைல் ஃபோனில் உள்ள பைபிள் அப்ளிகேஷனை வைத்து இப்போது படிக்கிறார்கள். மொபைலில் உள்ள பாடலை வைத்து பாடவும் செய்கிறார்கள். இது சரியா?
*பதில்*
தற்காலங்களில் வசதி கூடிவிட்டது. ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் போல மெபைல் ஃபோன் வந்து விட்டது.
இதை உபயோகப்படுத்துவதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
*நன்மைகள்*:
எங்கேயும் எப்போதும் நம் கையில் உள்ளது.
இலகுவாக எந்த வசனத்தையும் எடுத்துவிடலாம்.
குறிப்பு எழுதுவதும் பின்னர் அதை உபயோகபடுத்துவதும் சுலபம்.
ஒரு வசனத்தை – பல மொழிபெயர்ப்புகளில் படித்து ஆராய முடியும்.
எந்த வசனத்திற்கும் ஆழ்ந்த அர்த்தத்தை பல வேத வல்லுனர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை படித்து நாம் அந்த வசனத்தின் ஆழ்ந்த உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
வசனங்களை மற்றவர்களுக்கு இலகுவாக எடுத்து அனுப்ப உதவும்.
வெளி ஊழயங்களில் வேதாகமத்தை கொண்டு போவதை காட்டிலும் இதில் உபயோகபடுத்துவது சுலபம்.
பல மொழி பெயர்ப்புகளின் உதவியால் வசனத்தை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
*தீமைகள்*:
பைபிள் உபயோகபடுத்தும் போது மற்ற அப்ளிகேஷன்களின் இடையூறுகள் கவனத்தை திருப்பும்.
நீங்கள் வேதத்தை படிக்கிறீர்களா அல்லது பொழுது போக்குகிறீர்களா என்று மற்றவர்களுக்கு முகசுளிவை உண்டு பண்ணும்.
எந்த நேரத்திலும் அணைந்து (சுவிட்ச் ஆஃப்) விடலாம்.
உடனடியாக அடிக்கோடு இடுவதோ, நாம் நினைத்ததை எழுதவோ அவ்வளவு சுலபமில்லை.
எந்த சூழ்நிலையிலும் தொலைந்து போகலாம். உடைந்து போகலாம்.
மொபைல் ஃபோனில் இருக்கும் whatsapp / Facebookல் மற்றவர் தங்கள் குழுவில் அநுதினம் பகிரும் தேவையில்லாத அவசியமில்லாத விக்கிரக / ஆபாச படங்கள் தகவல்கள் - பரிசுத்த வேதாகமம் என்ற உன்னதமான புத்தகம் இருக்கும் அதே அப்ளிகேஷனோடு ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது.
*ஆலோசனை*:
வேத ஆராய்ச்சிக்காக வீட்டில் இருக்கும் போது உபயோகப்படுத்திக்கொள்வதில் டிஜிட்டல் பைபிள் அதிக பிரயோஜனம் உண்டு.
அனுதின வேத வாசிப்பிற்காக – பேப்பர் பைபிளை உபயோகப்படுத்துவது உசிதம்.
தொழுகைக்கு போகும் போது – பேப்பர் பைபிளை கொண்டு போக வேண்டும்.
ஒரு பைபிளை தொழுகைக்கு தூக்கி செல்வது மறந்து போய்விட்டது / கடினமென்றால் – உங்களை தேவன் எப்போதும் நினைவில் வைத்து இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பதும் கடினம்.
*பின்குறிப்பு* : சர்ச்சுக்கு போவது என்பது வழக்கச்சொல்லாகிப்போனது. சர்ச் என்பது நாம் தான் !! வேதம் நம்மையே சபை என்றும் ஆலயம் என்றும் அழைக்கிறது. தொழுகைக்காக நாம் கூடிவரும் இடத்தை சர்ச் என்றல்ல அதை சர்ச் கட்டிடம் அல்லது சபைக்கட்டிடம் அல்லது ஆங்கிலத்தில் Church Building என்று அழைக்கவேண்டும். 1கொரி. 3:17, எரே.26:17
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக