#281 - *தசமபாகம் இன்று அனேக சபைகளிள் தசமபாகம் பற்றியே பிரசங்கம்
செய்கிறார்கள். ஆகவே, தசமபாகம் பற்றி வேதத்தின்படி விளக்கம் தாருங்களேன்*
*பதில்*
வருமானத்தில் 10 சதவீதம் கடவுளுக்கு கொடுக்க வேண்டும்
என்பது தசமபாகம்.
மோசே மூலமாக தேவன் கட்டளையாகவே இஸ்ரவேல் ஜனங்களுக்கு
கொடுத்தார்.
· லேவி. 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின்
கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
· லேவி. 27:32
கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப்
பரிசுத்தமானது.
· தசமபாகம் என்பது - தானியத்திலும், திராட்சரசத்திலும்,
எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின்
எல்லா வரத்திலும் கொடுக்கப்பட்டது.
*நியாயபிரமாணத்தின்படி*:
இஸ்ரவேலர்கள் “லேவியருக்கு” கொடுக்கவேண்டும்”. (எபி. 7:5)
தசமபாகம் வாங்குபவர்கள் – லேவியராக இருக்கவேண்டும் !!
நாம் யாரும் இஸ்ரவேலர் அல்ல - எல்லாரும் *புறஜாதியினர்*
– நியாயபிரமானம் ஒருபோதும் நமக்காக கொடுக்கப்படவில்லை.
மேலும் நியாயபிரமாணம் சிலுவையில் முடிந்து விட்டது. (ரோ. 10:4)
*புதிய பிரமாணத்தை* நம்
எல்லாருக்கும் கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.
*புதிய கட்டளையின் படி மாத்திரமே நாம் நடக்க வேண்டும்*.
*புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்படவேண்டிய காணிக்கை முறை*:
- திட்டம் பண்ணி / சேர்த்து வைத்து கொடுக்க
வேண்டும் 1கொரி. 16:1-2
- தன் மனதில் நினைத்து வைத்தபடி கொடுக்க
வேண்டும் 2கொரி. 9:7
- மற்றவர் சொன்ன அளவின்படி கொடுக்க கூடாது
2கொரி. 9:7
- வருத்தப்பட்டு காணிக்கை கொடுக்க கூடாது
2கொரி. 9:7, 1பேதுரு 4:9
- இருப்பதில் இருந்து கொடுக்க வேண்டும்,
கடன் வாங்கி கொடுப்பதல்ல 2கொரி. 8:12
- பலவீனரை தாங்கும்படி கொடுக்கவேண்டும் அப்.
20:35
- வஞ்சனையில்லாமல் கொடுக்கவேண்டும் ரோ. 12:8
- பரிசுத்தவான்களின் குறைவுகளை நிவிர்த்தி
செய்யும் படி உதவவேண்டும் ரோ. 12:13
- எல்லோருக்கும் தெரியும்படி உதவிசெய்யகூடாது
மத். 6:3
- பரிபூரண சந்தோஷத்தோடு கொடுக்கவேண்டும்
2கொரி. 8:2
- உற்சாகமாய் கொடுக்கவேண்டும் 2கொரி. 9:7
...இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்..
1- யோவான் ஸ்நானகன் – 50சதவீதம் கொடுக்க சொன்னார் –
லூக். 3:11
2- இயேசு 100சதவீதம் கொடுத்தவளை பாராட்டினார் – மாற்கு
12:43
10சதவீதம் கொடுக்கவேண்டும் என்பது பழைய கட்டளை. சரியாய்
சொல்லவேண்டுமென்றால் – இஸ்ரவேலர்கள் ஆண்டிற்கு ஏறத்தாழ 33சதவீதம் கொடுத்தார்கள் !!
* தசமபாகம் என்கிற பெயரில் ஊழியர்கள் சபையாரிடம்
கேட்ககூடாது – அது வேதாகம சட்டவிரோதம்.
* ஊழியரையும், ஊழியத்தையும் தாராளமாக தாங்கவேண்டியது –
சபையாரின் கடமை.
* உதாரத்துவமாய், உற்சாகமாய், நிறைவாய்
சபையார் மாத்திரம் அல்ல ஊழியர்களும் காணிக்கையில் முன்மாதிரியாக பங்கெடுக்க வேண்டும்.
சபையாரிடம் வாங்கி வாங்கி தன் சொந்த பைசாவை சேமிக்க கூடாது!!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக