*பதில்*
அது ஒரு மிகைப்படுத்தலின் வெளிபாடு.
1கொரி. 13:3 - நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் *பேசினாலும்*, அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற
வெண்கலம்போலவும், ஓசையிடுகிற
கைத்தாளம்போலவும் இருப்பேன் என்கிறார்...
ஒருவன் உலகின் எல்லா மொழியிலும் பேச கற்றிருந்தாலும், அன்பு இல்லாவிட்டால்
பேசுவதெல்லாம் பயனற்றதாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அன்பு இல்லையென்றால் அந்த வார்த்தைகள் வெறும் சப்தமாக தான் இருக்கும்.
இதை குறிப்பிட்டதால் பவுல் இந்த மொழிகளையெல்லாம் பேசுகிறார்
என்ற கூற்று அல்ல, அத்தகைய
திறன் இருந்தாலும் அன்பு இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை என்று சொல்கிறார்.
எந்த மொழிக்கும் இலக்கணம் இருக்க வேண்டும். கடந்த காலம்
நிகழ் காலம் எதிர் காலத்தை குறிக்கும் வார்த்தைகள் இருக்கும். தூதர் பாஷை என்று சொல்லிக்கொண்டு
சபையில் அனைவரும் பிதற்றுவதற்கு வேதம் அனுமதி கொடுக்கவில்லை – அவரவர் விருப்பம்
இருந்தால் அவர்கள் வீட்டில் தனியாக பேசிக்கொள்ளலாம்.. ஆதார வசனங்கள் கீழே:
1கொரி. 14:27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது *இரண்டுபேர்மட்டில்*, அல்லது *மிஞ்சினால்
மூன்றுபேர்மட்டில்* அடங்கவும், அவர்கள் *ஒவ்வொருவராய்ப்*
பேசவும், *ஒருவன் அர்த்தத்தைச்*
சொல்லவும் வேண்டும்.
14:28 *அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்
பேசக்கடவன்*.
இந்த தலைப்பின் முழு வேத ஆராய்ச்சி செய்தி கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்:
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக