வெள்ளி, 19 ஜூலை, 2019

#278 - நமது பாவத்திற்காக இயேசு கிறிஸ்து மரித்தார் என்றால் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு மீண்டும் மரணம் ஏற்படுவது ஏன்?

#278 - *நமது பாவத்திற்காக இயேசு கிறிஸ்து மரித்தார் என்றால் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு மீண்டும் மரணம் ஏற்படுவது ஏன்?*

*பதில்*
ரோ. 6:23ல் பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் என்று பார்க்கிறோம்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றவுடன் நாம் எப்போதும் சரீர மரணத்தை நினைவு கொள்கிறோம்.

ஆதி. 2:17ல் – தேவன் ஆதாமிடம் சொன்னார் : “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்”

அந்த கனியை அவர்கள் புசித்த உடன் மரித்தார்களா? இல்லையே, பல நூறாண்டுகள் வாழ்ந்து தானே சரீரத்தில் மரித்தார் !!

சாகவே சாவாய் என்று சொன்னது – தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு.

அந்த தொடர்பு – இயேசு கிறிஸ்துவின் மூலம் மறுபடியும் பிதாவுடன் புதிப்பிக்கப்படுகிறது – அல்லேலூயா !!!

ரோ. 5:21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

ரோ. 8:13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

2தீமோ. 1:10 நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக