#259 - *ஆராதனையின் போது ஊழியக்காரர்கள் கரங்களை
உயர்த்துங்கள், எழுந்து
நில்லுங்கள், அன்னிய
பாஷையில் பேசுங்கள் இப்படி பல கட்டளைகளை பிறப்பிக்கிரார்களே இவை குறித்து வேதம்
என்ன சொல்கிறது தெளிவுபடுத்துங்கள்*
*பதில்*:
இயேசுவின் நாமத்தில் எங்கு கூடினாலும் அங்கு கிறிஸ்து வருவார் என்று அல்ல, *அவர் வந்துவிட்டார்*
என்று வேதம் சொல்கிறது (மத். 18:20)
3வது பாட்டு பாடும்போதோ, 4வது பாட்டின் மத்தியில் திடீரென்று இயேசு வந்து விட்டார் அவரை
வரவேற்கும்படி எல்லோரும் கைதட்டுங்கள் என்று முன்பாக நின்றுக்கொண்டு தன் திறமைகளை பெர்ஃபார்மன்ஸ் பண்ணுகிறவர்
சொன்னதும் எல்லோரும் உற்சாகமாய் கை தட்டுகின்றனர் !!
அதாவது, அது வரைக்கும் கிறிஸ்து அவர்கள் மத்தியில் இல்லை என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்களோ !! ?? 😊
ஆராதனையில் (தொழுகையில்) கீழ்கண்டவாறு நாம் இருத்தல்
அவசியம்:
ஏசா. 66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம்
சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு,
என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
எஸ்றா 9:4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து
வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற
யாவரும் என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி
செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
1பேதுரு 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல்
அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத்
தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச்
சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
2கொரி. 7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள்
நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை
தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
பிலி. 2:12 ஆதலால், எனக்குப்
பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே,
நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும்
நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
எபி. 4:1 ஆனபடியினாலே, அவருடைய
இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப்
பயந்திருக்கக்கடவோம்.
எபி. 12:28 ஆதலால், அசைவில்லாத
ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய்
ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
சங். 2:11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்,
நடுக்கத்துடனே களிகூருங்கள்.
சங். 89:7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச்
சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற
அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
சங். 99:1 கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார்,
ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின்
மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.
* இப்படி இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளது !!!
கையை தூக்கவும், டான்ஸ் ஆடவும்,
ஆர்ப்பரிக்கவும், ஊளையிடவும், கத்துவதும்,
கதறுவதும், உருளுவதற்கும் *தேவனுடைய ஆராதனையில் தொழுகையில்
இடமில்லை*...
தேவனுக்கு முன்பாக பயமின்றி துணிகரம் கொண்டால் அவர் அங்கு இருக்கமுடியாது.
தங்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை துவங்கி, அதற்கு தலைவராகவும் நிறுவனராகவும் இருந்து சுயமாய் நடத்துகிற சொந்த கேளிக்கை கிளப்புகளில் இவைகளை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை.. சபை என்ற பெயரில் கேளிக்கை க்ளப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது !!
ஆராதனையில் அந்நிய பாஷையை குறித்த விளக்கம் நமது கேள்வி பதில் பதிவு #256 -இல் பார்க்கவும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக