வெள்ளி, 5 ஜூலை, 2019

#258 - கர்த்தருக்கு பிரியமான ஆராதனை எது?

#258 - *கர்த்தருக்கு பிரியமான ஆராதனை எது?*

*பதில்*:
அநேகருக்கு இந்த பதிவு முகச்சுளிவை தரும்... வசனம் பட்டயமாயிற்றே... மனந்திரும்பும் போது தேவன் பிரியப்படுவார் !!!
 
 நாட்களை பிரயோஜனபடுத்துவோம். ஜனங்களுக்கு பயப்படாமல், தேவனுக்கு கீழ்படியும் போது அவர் சகலவற்றையும் சீர்படுத்துவார்.

கொஞ்சம் நீளமான பதிவு இது ஆனால், முக்கியமான கேள்வி. பொறுமையாய் படிக்கவும்.

ஆரம்ப காலங்களில் மனிதர்கள் தேவனை பலியோடு தொழுது கொண்டார்கள் (ஆதி. 4:5)

சவுல் இராஜா தவறாக தொழுது கொண்ட போது, பலியை பார்க்கிலும் கீழ்படிதல் அவசியம் என்று அவருக்கு வலியுறுத்தப்பட்டது (1சாமு. 15:22)

தேவன் சொன்னபடி அவரை தொழுது கொண்டவர் மீது அவர் பிரியமாயிருந்தார் (யோசு. 1:7, 1இரா. 11:38, எரே. 7:23)

பரிசேயனுடைய ஜெபத்தை தேவன் ஏற்காதது ஏன் என்பதை இயேசு கிறிஸ்து நமக்கு விளக்கி காண்பித்தார் (மத். 6:5, லூக். 18:10-14)

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். யோ. 4:24

“இதற்கு மிஞ்சினது வீணான ஆராதனை”.

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார் (மத். 15:9)

*தேவனுக்கு பிரியமான ஆராதனை எது*?
மனுஷனுடைய கற்பனைகளை உட்புகுத்தாமல், புதிய ஏற்பாட்டு சத்தியத்தை மாத்திரம் கடைபிடித்து ஆராதிப்பது என்பது தேவ கட்டளைக்கு உட்பட்டவை. அவர் அதில் பிரியபடுகிறவர்.

*எப்படி ஆராதிப்பது*?

*கிறிஸ்தவ ஆராதனை முறை*:
தேவனை தொழுது கொள்ளும்படி கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் கூட வேண்டும் (அப். 20:7, 1கொரி. 16:2)

கூடுவதில் தவறக்கூடாது (எபி. 10:25)

அனைத்தையும் ஒழுங்கும் கிரமமாகவும் செய்ய வேண்டும் (1கொரி. 14:40)

*ஜெபம்*:
கிறிஸ்துவின் மூலமாக பிதாவினிடத்தில் ஜெபிக்கிறோம். ஆகவே ஆண்டவரே கர்த்தாவே என்று ஜெபத்தில் பயன்படுத்த முடியாது. இந்த பதங்கள் கிறிஸ்துவை குறிக்கிறது (அப். 2:36, பிலி. 2:11, எபி. 4:14-18, கொலோ. 3:17, யோ. 14:6, 14.

ஜெபம் என்பது தேவனோடு தொடர்பு கொள்ளுவது (பிலி. 4:6)

நம்மோடு தம் வார்த்தையின் மூலமாக தேவன் தொடர்பு கொள்கிறார் (எபி. 1:1-2)

கிறிஸ்தவனுடைய அத்தியாவசியமான அநுதின கடமை ஜெபிப்பது (1தெச. 5:17)

கூடுகையில் ஜெபம் இன்றியமையாதது (அப். 12:5, 12)

கீழ்கண்டவற்றிற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெலவீனத்தாலும் அறியாமலும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கோரி ஜெபிக்கவேண்டும்  (அப். 8:18-24, 1யோ. 1:9).

அர்ப்பணித்தும் தேவனை துதித்தும் ஜெபிக்க வேண்டும் (மத். 6:9)

தேவன் தந்த எண்ணிமுடியாத ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்க வேண்டும் (எபே. 5:20)

நன்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் வேண்டி ஜெபிக்க வேண்டும்  (யாக். 1:5)

கிறிஸ்தவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும், நம் எதிரிகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும் (எபே. 6:18, 1தீமோ. 2:1-2, மத் 5:44)

சோதனையிலிருந்து நாம் விடுபட (மத் 26:41, யாக் 1:13, 1கொரி 10:13)

தேவனை நம்பும் அனைவரின் மத்தியிலும் நல்ல ஐக்கியம் பெலப்பட (யோ. 17:20-21)

நம் அநுதின தேவைக்காக ஜெபிக்க வேண்டும் (மத். 6:11)

தேவனுடைய சித்தப்படி நாம் ஜெபிக்கும் போது அதை பெற்றுக்கொள்கிறோம் (மத். 7:7-11, 21:22, 1யோ. 5:14)

*பாடல் முறை*
இயேசுவும் அப்போஸ்தலரும் பாடினார்கள் (மத். 26:30, அப். 16:25)

கிறிஸ்தவர்கள் கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ண வேண்டும் (எபே. 5:19)

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, பாடவேண்டும்.

இசைப்பதோ தட்டுவதோ ஆடுவதோ குறிப்பிடப்படவில்லை.

இரண்டு காரியத்திற்காக பாடல் உதவுகிறது:
1) பாடி தேவனை துதிக்கிறோம். நம் சந்தோஷத்தை பாடலின் மூலம் வெளிபடுத்தி அவரை புகழ்கிறோம் (சங். 66:1-2, யாக். 5:13)

2) சக கிறிஸ்தவர்களுக்கு போதிக்கவும் ஊக்கப்படுத்தவும் பிரயோஜனபடுகிறது (கொலோ. 3:16)

கொயர் அல்லது பாடகர் குழு வைத்து அவர்கள் மாத்திரம் பாடுவது வேதத்தில் சொல்லப்பட்ட முறையல்ல.  கூடியிருக்கும் அனைவரும் பாடவேண்டும்.

இசைகருவிகளை ஆராதனையில் உபயோகித்து பாடினதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் காணமுடியாது.
 
இசைகருவிகள் சுயமாக பேசவோ, உபதேசிக்கவோ வாழ்த்தவோ முடியாதாகையால் அவைகளை சேர்த்துக்கொண்டு பாடுவது அந்நிய அக்கினியை கொண்டு வந்தது போலாகிவிடுகிறது. வேதத்தில் இல்லாதவற்றை நாம் அங்கீகரிக்க கூடாது (எபே. 5:19, கொலோ. 3:16)

*காணிக்கை*
கொடுப்பதே பாக்கியம் (அப். 20:35)

ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் காணிக்கை கொடுக்க வேண்டும் (1கொரி. 16:2)

எல்லாம் கர்த்தருடையது என்பதை மறக்ககூடாது (சங். 24:1)

திட்டம் செய்து ஒரு தொகையை, நாம் கூடும் சபை வளர்ச்சிக்கென்று தவறாமல் கொடுக்க வேண்டும் (1கொரி. 16:1-2)

பத்து (10%) சதவீதம் அல்ல, அதை காட்டிலும் அதிகமாக உதாரத்துவமாய் கொடுக்கவேண்டும் (2கொரி. 8:1-5)

ஐயோ கொடுக்க வேண்டுமே என்று கட்டாய மனதோடு அல்ல, காணிக்கை நேரம் வந்து விட்டதே என்று விசனத்தோடும் அல்ல, நாம் உற்சாகமாய் காணிக்கை செலுத்த வேண்டும் (2கொரி. 9:7).

அப்படி கொடுக்கும் போது, தேவன் அதற்கு பதிலளிப்பார் (லூக். 6:38)

அவசியப்படுகிறவர்களுக்கும் சபை தேவைக்கும் அதை பயன்படுத்தவேண்டும் (அப். 2:45, ரோ. 10:14-15, 1கொரி. 9:14).

*கர்த்தருடைய பந்தி*
தன் சிலுவை மரணத்திற்கு முன்னர், கிறிஸ்துவானவர் தன் பந்தியை பிரகடனபடுத்தினார் (மத். 26:26-29, மாற்கு 14:22-25, லூக். 22:17-20, 1கொரி. 11:23-26)

ஒரு கிறிஸ்தவன், தன் பாவத்திலிருந்து விடுபட தேவன் தனக்கென்று என்ன செய்தார் அல்லது எப்படி தன் பாவத்திலிருந்து மீட்டார் என்று நினைவு கொள்ளும் பந்தி இது.

ஒரு காலத்தில் பாவியாக அலைந்து திரிந்ததை நினைவுக் கொண்டு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் நிமித்தம் தற்போது தேவ பிள்ளையாய் இருக்கிறோம் என்று நினைவுக்கூறவேண்டும்.

புதிய சட்டத்திற்குள் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டும் (1கொரி. 11:27-29).

கிறிஸ்துவின் பந்தியில் 2 பொருட்கள் உபயோகப்படுகிறது. (1கொரி. 11:26)
ஒன்று – அப்பம்
இரண்டு – திராட்சை ரசம்

புளிப்பில்லாத அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தை குறிக்கிறது (லூக்கா 22:19)
புளிப்பு என்பது பாவத்தை குறிப்பதால், அப்பம் புளிப்பற்றதாய் இருத்தல் அவசியம் (எபி. 7:26)
பஸ்காவானது புளிப்பில்லாததாக இருந்தது.

திராட்சை ரசம் கிறிஸ்துவின் இரத்தத்தை பிரதிபளிக்கிறது (மத். 26:28)
ஆதி கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் பந்தியை அநுசரித்தனர் (அப். 20:7)

கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகிய வாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய பந்தியை எடுக்க வேண்டும்...
மாதத்திற்கு ஒரு முறையல்ல ஒவ்வொரு வாரமும்....
மாதந்தோறும் என்பது வேதத்தில் இல்லாத கட்டளை !!

*பிரசங்கம்*
வேத வாசிப்பும், போதனையும், உபதேசமும் ஆராதனையின் (தொழுகையின்) ஒரு அங்கம் (1தீமோ. 4:13, அப். 20:7)

ஆண்கள் தான் பிரசங்கிக்க வேண்டும் (1கொரி. 14:34)

தன் பிரயாண கதை, சொந்த அனுபவங்களை அல்ல.. அவர் சொன்னவற்றை பிரசங்கிக்க வேண்டும் (யோனா 3:2)

தேவனை மாத்திரம் பிரியபடுத்த பிரசங்கியாளர்கள் கவனமாய் இருக்க வேண்டும். (அப்.  4:19-20, கலா. 1:10, 1தெச. 2:4).

திருக்குறள்களும் பழமொழிகளும் மேடை பேச்சுகளும் நாடக முறைகளையும் பின்பற்றாமல்  (நீதி. 28:4) தேவனுடைய வார்த்தையை மாத்திரம் பேச வேண்டும் (1தீமோ.  4:13, 2தீமோ. 2:15, அப். 2:16, 25, 34; அப். 7; அப். 8:35; அப். 18:28).

தேவனுடைய வார்த்தை ஒன்றே போதுமானது பிரசங்கத்திற்கு !! (2தீமோ. 3:16-17, 1கொரி. 4:6).

தவறான போதனையை கண்டித்து பேசவேண்டும். கலா. 1:6-9, 1தீமோ. 1:6-7, 4:1-3, 2தீமோ. 2:16-18, 3:5-9, தீத்து 1:9-11.

ஃபாதர், ரெவரென்டு, பாஸ்டர் என்று தங்களுக்கு விசேஷ பட்டங்களை போட்டுக்கொள்ளக்கூடாது (மத். 23:8-12)

மூப்பர்கள் (பாஸ்டர்/கண்காணிகளும் ஒரே அர்த்தம் தான் ) சபையை நிர்வாகம் செய்ய வேண்டும் (அப். 20:28)

பிரசங்கியாளர் / சுவிசேஷகர்கள் போதிக்க வேண்டும் – 2தீமோ. 4:1-2

பிரசங்கியாளர் சபையை நிர்வாகிப்பது தேவ கட்டளையல்ல !!

நிர்வாகம் வேறு, பிரசங்கியாளர்/உபதேசியாளர் வேறு.

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம் (எபி. 12:28)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக