சனி, 6 ஜூலை, 2019

#260 கேள்வி: இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே என்று மரியாளிடத்தில் ஏன் கூறுகிறார் - விளக்கவும்


#260
கேள்வி:

இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். யோ 20:17 – விளக்கவும்.


*பதில்*:
மற்ற ஸ்திரீகளோடு மகதலேனா மரியாளும் சிலுவையில் கோர மரணமடைந்த கிறிஸ்துவிற்கு தங்கள் முறைமையின்படி மரித்த சரீரத்திற்கு செய்ய வேண்டிய  கடமைகளை அந்த நாளிலேயே நேரமின்மையின் காரணமாக செய்ய முடியாமல் ஓய்வு நாள் துவங்கிவிட்டதால் கல்லறையை மாத்திரம் பார்த்து விட்டு கந்தவர்க்கங்களையும் பரிமள தைலத்தையும் தயார் செய்து ஒய்வு நாள் முடிவதற்கு காத்து இருக்கிறார்கள் (லூக்கா 23:54-56)

எந்த வேலையும் செய்யக்கூடாத ஒய்வு நாள் முடிந்த மறுநாளான அந்த 3ம் நாளின் காலை பொழுது விடிந்தவுடன் வேக வேகமாக கல்லறைக்கு போய் தன் ஆண்டவரின் சரீரத்திற்கு தங்கள் யூத முறைமையின் படி மரியாதை செய்ய ஒடினபொழுது சரீரத்தையே காணவில்லை என்றதும் கலக்கமடைந்து விட்டார்கள் (லூக் 24:1-4)

அதை தொடர்ந்து மிகுந்த வருதத்தில் கல்லறையில் நின்று கொண்டிருந்த மகதலேனா மரியாளை இயேசுவானவர் நேரிடையாக சந்திக்கும் வேளையில் – மரியாள் அவரை கவனியாமல் தோட்டக்காரர் (ஆண்கள் முகத்தை பெண்கள் பார்த்து பேசும் பழக்கம் கிடையாது) என்று அவரிடம் இயேசுவின் சரீரத்தை குறித்து விசாரிக்க, இயேசு மரியாளின் பெயரை சொல்லி கூப்பிட்டதும் போதகரே என்று ஆச்சரியத்திலும் மிகுந்த மகிழ்ச்சியிலும் அவரை கட்டியணைக்க முற்படுகிறாள். ஹாப்தோமாய் என்கிற கிரேக்க வார்த்தைக்கு அணைப்பது என்று பொருள். (யோ 20:11-16). இது ஒரு உணர்ச்சி பூர்வமான சம்பவம்.

மகதலேனா மரியாளிடத்தில் இயேசு சொன்னவற்றிற்காக கீழ்கண்ட காரணங்களும் இருக்கலாம்:

யோ 14:3ல் நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்ற வார்த்தையை அவள் நினைவு கூர்ந்திருக்கலாம் – கிறிஸ்து அதை மறுத்திருக்கலாம்.

ஆகவே அவர் தான் இன்னும் தன் பிதாவினிடத்திற்கு செல்லவில்லை என்று சொல்வதை நாம் கவனிக்க முடிகிறது.

நன்றி


*எடி ஜோயல் சில்ஸ்பி*
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 2:

Group 1:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக