வெள்ளி, 5 ஜூலை, 2019

#254 - தேவனை கண்டால் சாவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்க கீழே உள்ள வசனங்களின் படி - காணக்கூடாதவரை எப்படி கண்டார்கள்?

#254 - *தேவனை கண்டால் சாவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்க யாக்கோபும் மானோவாவும் காணக்கூடாதவரை எப்படி கண்டார்கள்?*

1) அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். ஆதியாகமம் 32:30

2) தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான். நியாயாதிபதிகள் 13:22

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 தீமோத்தேயு 6:16

*பதில்:*
கிறிஸ்துவை தவிர தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை (யோ. 1:18) என்று நமக்கு வேதம் சொல்கிறது.

என் முகத்தை பார்க்கிறவன் உயிரோடு இருக்க முடியாது என்று தேவனே சொல்வதை யாத். 33:20ல் வாசிக்கிறோம்.

ஆகவே நீங்கள் குறிப்பிட்ட வசனத்தை ஒரு முறை கூட ஆராய்ந்து பார்க்கும் போது கீழ்கண்ட விளக்கங்கள் புலப்படும்:

1)
ஆதி. 32:24ம் வசனத்தில் – அவர் போராடியது ஒரு புருஷனோடு என்று படிக்கிறோம்.

யாக்கோபு – அந்த புருஷனுடைய பெயரை கேட்ட பொழுது, அவர் அதை வெளிபடுத்தாதபடியாலும், ஒரு தொடுதலினால் தன் தொடை சந்து சுளுக்கினதாலும் – நான் தேவனை முகமுகமாய் கண்டேன் என்கிறார் (வ29-30)

யாக்கோபு போராடியது – *தேவனோடு அல்ல மாறாக அவர் தூதனோடு*. தேவதூதன் தேவனால் அனுப்பப்பட்டபடியால் தேவனை தான் முகமுகமாய் கண்டதாக ஒப்பனையாக கூறுகிறார் – இதை ஓசியா தீர்க்கதரிசி நமக்கு இன்னும் தெளிவுபடுத்துகிறார் – வாசிக்கவும் ஓசியா 12:4.

2)
சிம்சோனின் தகப்பனான மனோவா, தன் மனைவியிடம் தேவனைக் கண்டோம் – சாகவே சாவோம் என்கிறார் (நியா. 13:22)

இந்த பகுதியையும் கவனமாக படித்தால் – *அவர் தேவதூதனை பார்த்தார்* என்று விளங்கும்.

நியா. 13:3 *கர்த்தருடைய தூதனானவர்* அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, …..

நியா. 13:6 அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: *தேவனுடைய மனுஷன்* ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் *தேவனுடைய தூதரின்* சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

நியா. 13:8 அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, *நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன்* மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து ….

நியா. 13:9 தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது *தேவனுடைய தூதனானவர்* திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.

நியா. 13:13 *கர்த்தருடைய தூதனானவர்* மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

இங்கும் அவர்கள் தேவனை அல்ல – தேவ தூதனை பார்த்தார்கள் என்பது தெளிவாகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக