புதன், 12 ஜூன், 2019

#223 கேள்வி: சங்கீத புஸ்தகத்திற்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

#223 *கேள்வி: - சங்கீத புஸ்தகத்திற்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுத்து CSI மற்றும் பெந்தெகோஸ்தே சபையினர் அதை மையமாக வைத்து பேசுவது ஏன்?*

*பதில்:*
சி.எஸ்.ஐ மற்றும் பெந்தேகோஸ்தே அமைப்பினருக்காக அல்ல...
சங்கீத புஸ்தகம் பலவேறு பகுதிகளை கொண்டு முக்கியத்துவம் வாய்ந்தது.

5 புத்தகங்களை அடங்கியது நாம் பார்க்கும் 150 பாடல்களை கொண்ட சங்கீத புத்தகம்.
  • புத்தகம்  1 (சங்கீதம்  1–41)
  • புத்தகம்  2 (சங்கீதம்  42–72)
  • புத்தகம்  3 (சங்கீதம்  73–89)
  • புத்தகம்  4 (சங்கீதம்  90–106)
  • புத்தகம்  5 (சங்கீதம்  107–150)
*எழுத்தாளர்கள்:*
75 சங்கீதங்கள் – தாவீது
12 சங்கீதங்கள் – ஆசாப் குமாரர்கள்
11 சங்கீதங்கள் – கோராகு குமாரர்கள்
48 – அறியப்படாதவர்கள்
2 – சாலமோன் இராஜா
1 – மோசே
1 – ஏத்தான்

மேலும் இந்த புத்தகங்களில் கீழ் வரும் தலைப்பின் கீழே பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது:

1-    பாமாலைகள்
2-    சமுதாயத்தை குறித்த புலம்பல்கள்
3-    இராஜரீக பாடல்கள்
4-    சொந்த புலம்பல்கள்
5-    நன்றி செலுத்தும் பாடல்கள்

எல்லா சூழ்நிலைக்கும் இந்த சங்கீத பாடல்கள் அமைவதால் – பலர் இதை பொதுவாக பயன்படுத்துகின்றனர்.

ஆகவே தான் வேத வல்லுனர்கள் – யார் வேதாகமத்தை திறந்தாலும் இலகுவாக இந்த பகுதிகள் கண்களில் படும்படியாக இவை வேதாகமத்தின் நடு பகுதியில் இணைத்திருக்கிறார்கள் !!

கிறிஸ்தவர்களாகிய நாம் – புதிய ஏற்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அதில் தான் கிறிஸ்தவ சட்டம் உள்ளது.

நடைமுறை சட்டத்தை அறிந்து  அதன்படி வாழ்க்கையை நடத்தினால் மாத்திரமே வாழ்க்கையின் முடிவு சந்தோஷம் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக