புதன், 12 ஜூன், 2019

#222 - அன்பு திரளான பாவங்களை மூடும் 1பேதுரு 4:8 இதன் விளக்கம் என்ன?

#222 - *அன்பு திரளான பாவங்களை மூடும் 1பேதுரு 4:8 - இதன் விளக்கம் என்ன?*

*பதில்:*
ஒருவருக்கொருவர் காண்பிக்கும் அன்பை குறித்து இந்த பகுதியில் வாசிக்கிறோம் (வ9-10)

திரளான பாவங்களை மூடும் என்பதன் பொருள் – நமக்கு விரோதமான தவறுகளை மீறுதல்களை நாம் பாராமல் பொறுத்துக்கொள்வோம் என்பதே.

அன்பு இருந்ததால் தானே சொந்த பிள்ளை தான் சொன்னபடி செய்யாமல் மீறி செய்திருந்தாலும் – போகட்டும்  என்று மீண்டும் உறவாட தோன்றும்.

ஆனால் ஒரு தொழிலாளியோ எதிர்வீடு அல்லது பக்கத்து வீட்டு காரரோ தன் அநுதின வீட்டு குப்பையை கொண்டு போகும் போது நம் வாசலின் முன்பு சிதறி சாலையில் கிடந்தாலும் பொறுக்காமல் அவனிடம் சண்டைக்கு போவதை அறிந்திருக்கிறோமே !!!

மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி. நீதி. 12:16

குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். நீதி. 17:9

மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். நீதி .16:28

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக