புதன், 12 ஜூன், 2019

#224 - தூய ஆவியானவரை ரோமன் கத்தோலிக்கர்கள் விட்டு விட்டதால் தான் பிரிவு.

#224 - *தூய ஆவியானவரை ரோமன் கத்தோலிக்கர்கள் விட்டு விட்டதால் தான் மற்ற சபையினர் குறிப்பாக பெந்தேகோஸ்தே அமைப்பினர் போன்றோர் பிரிந்ததாக ஒரு RC ஃபாதர் கூறினதை செய்தியில் கேட்டேன் – உண்மையா? விளக்கவும்*.

*பதில்:*
ரோமன் கத்தோலிக்கம் என்பது கிறிஸ்துவுக்கு பின் சுமார் 365ம் ஆண்டுகளில் தான் உருவெடுத்தது.  

அது வரைக்கும் கிறிஸ்தவத்தில் பிரிவு இல்லை
– கிறிஸ்தவம் மாத்திரம் தான் இருந்தது.

கிறிஸ்துவினுடைய சபை என்றே எல்லா கூடுகையும் அழைக்கப்பட்டது.

எபேசுவில் கூடும் சபை
பிலதெல்பியாவில் கூடும் சபை
சிமிர்னாவில் கூடும் சபை
ரோமர் பட்டனத்தில் கூடும் சபை என்றே அழைக்கப்பட்டது.

கத்தோலிக்கர்கள் தான் முதன் முதலில் கிறிஸ்தவத்தில் பிரிவை கொண்டு வந்தது.

சிலை வணக்கம், மரியாள் வணக்கம், யோசேப்பை வணங்குவது, சீஷர்களை வணங்குவது என்று வேதத்தில் தடைசெய்யப்பட்ட யாவையும் உள்ளே கொண்டு வந்தார்கள்.

மேலும் தங்களுக்கென்று போப் என்பவரை நியமித்து அவரின் மற்றும் அவர் குழுக்களின் கொள்கைகளை சட்டமாக இயற்றி அதை உலகமுளுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஆகவே வேதத்தையும் அவர்கள் கோட்பாடுகளையும் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியாது.

நாம் கிறிஸ்தவர்கள் என்றால் – கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் – கிறிஸ்துவின் போதனையை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.

பிதாவை மாத்திரம் தொழுது கொள்ள வேண்டும் (மத். 4:10)

போதகர்கள் திருமணம் செய்ய வேண்டாம் என்று கட்டளையாக கொண்டு வந்தார்கள் – வேதத்திற்கு முரணானது (1தீமோ. 4:1-3 வரைக்கும் படித்து பார்க்கவும்)

தூய ஆவியானவரை இவர்கள் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் – வேதத்திற்கு முரணான தங்கள் எல்லா கோட்பாடுகளையும் களைந்து கிறிஸ்துவை மாத்திரம் பின்பற்றுவது அவசியம்...

நியாயதீர்ப்பில் தப்பிக்க வேண்டுமென்றால் – வேறு வழியில்லை. ஒருவேளை என் எழுத்துக்கள் வாசிக்கும் பலருக்கு சுருக்கென்று இருக்கலாம் – இதை நானல்ல – வேதம் சொல்கிறது என்பதை மனதில் கொண்டு மனந்திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய அநுதின ஜெபம்.

மேலும் – நாம் இந்த பூமியில் மாம்சத்தில் நம்மை பெற்றெடுத்த தகப்பனைல்லாமல் – பரலோகத்தில் இருக்கும் தேவனை தவிர வேறு யாரையும் FATHER என்று கூப்பிடக் கூடாது.

மத். 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----* 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக