#204
கேள்வி:
(பல கேள்விகள் அடங்கிய தொகுப்பை
– ஏழு கேள்விகளாக பிரித்து ஒன்றன்பின் ஒன்றாக வார்த்தையோ எழுத்தோ மாறாமல் அப்படியே
மற்றவர்களுக்கு பிரயோஜனபடும்படியாய் பிரித்திருக்கிறேன்.)
ஏழு கேள்விகளின் முதல் கேள்வி - 1/7
தேவன்
அன்பானவர் என்று ஒரு பக்கம் பைபிளில் வாசித்து விட்டு அவர் பாவம் செய்த தமது
பிள்ளைகளை நரகத்தில் போடுவார் என்று வேதம் கூறுவது சரியாக இருக்குமா என்ன? எனக்கு இது முரண்பாடாக தெரிகிறது.
உங்களுக்கு எப்படி சகோ? மனிதன்
கூட இன்னொரு மனிதன் தவறு செய்தால் அதிகபட்சமாக தூக்கு தண்டனை தானே கொடுக்கிறான். அவனை காலம் முழுதும் வைத்து வாட்டி
கொலை செய்வதில்லை... தூக்கு தண்டனை கூட ஒரு நிமிடம் தானே? மனிதனே
இவ்வளவு மனவுருக்கமாய் இருக்கும் போது நம் பரம்பிதா காலம் முழுதும் நம்மை
நரகத்தில் போட்டு வாட்டும் அளவுக்கு கொடுமையானவரா?? அப்போது
நாம் கடவுளை விட இரக்க குணமுள்ளவர்களா?
பதில்:
இந்த கேள்விகளை
எழுப்பியமைக்கு மிக்க நன்றி – அநேக ஆரம்ப கிறிஸ்தவர்களுக்கு இந்த பதிவு மிக பிரயோஜனமாக
இருக்கும்.
பதில் நாம் நினைப்பதற்கு
மாறாக வேறு பக்கம் உள்ளது. உண்மையில் பார்க்க போனால் – மனிதர்கள் நரகத்திற்கு
செல்வதைத் தடுக்கும் அனைத்து காரியங்களையும் தேவன் செய்திருக்கிறார்.
அவர் தன்னுடைய
சொந்த மகனை கூட மாம்சத்தில் துன்பப்படுத்தபடவும், நரகத்திற்கு ஜனங்கள் போகாமல்
இருக்கும்படி காப்பாற்றுவதற்காக சிலுவையில் மரிக்கவும் ஒப்புக்கொடுத்தார்.
அவரது குமாரனாகிய
இயேசு கிறிஸ்துவின் மூலம், மனிதர்கள் பரலோகத்திற்கு
போக வழி செய்தார்.
பாவம்
செய்கிறவர்கள் தங்கள் தீய வழியை விட்டு பரிசுத்தத்திற்குள் நடப்பதை வலியுருத்துகிறார்.
சாத்தானின்
வல்லமையிலும் நரகத்தின் எல்லைகளிலிருந்து தப்பிக்கும் வழிமுறையை கற்பிக்கப்பட்டிருந்தும்
– பரலோகம் போவதா நரகம் போவதா என்பதை முடிவு செய்வது மனுஷனுடைய கையில் உள்ளதேயன்றி –
தேவனல்ல !!!
அவனவன் செய்த காரியங்களுக்காக
அவனவன் நன்மையையோ தீமையையோ பெற்றுக்கொள்கிறான் !!
தாமதிக்கிறார்
என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது
வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும்
கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3:
9).
... சரீரத்தில்
அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக
வெளிப்படவேண்டும். 2கொரி 5:10
நரகத்திற்கு
மனிதனை தேவன் அனுப்புவதல்ல – மாறாக மனிதனே நரகத்தை தொிந்தெடுக்கிறான் !!!!
நன்றி
எடி ஜோயல்
** அனைத்து கேள்வி பதில்களும்
வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
ஈமெயிலில் பெற Subscribe பண்ணிக்கொள்ளவும்.
கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2 :
கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1 :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக