#203
கேள்வி:
ஆதி 19:32-37ம்
வசனத்தை முன்னிட்டு வேற்று மதத்தினர் பரப்பி வருகின்றனர் – விளக்கவும்.
பதில்:
விபசாரத்தினாலும், மோசமான அந்நிய மாம்சத்துக்கும் (மனிதனோடு மனிதனல்லாத) உறவு
கொண்டு சோரம் போன சோதோம் கொமாரா பட்டணத்தை தேவன் முழுவதுமாய் கந்தகத்தினாலும்
அக்கினியினாலும் அழித்தார் (யூதா 1:7, ஆதி 19:24-25)
அந்த இடத்திற்கு நான்
நேரிடையாக 2016ம் ஆண்டு சென்று கண்டிருக்கிறேன். ஏறத்தாழ 4000 வருடங்கள் ஆகிறது –
இன்று கூட எந்த ஒரு சதுரஅடியில் ஒரு புல் கூட முளைக்கவில்லை.... கந்தகம் நிறைந்து
உள்ளது !! தேவ கோபம் என்பதை அங்கு நேரிடையாக நான் கண்டபோது நடுக்கமுற்றேன்.
இந்த சம்பவத்திற்கு
பின்னர் தப்பி வந்த லோத்தின் குமாரத்திகள் தங்கள் சந்ததி பெறுக வேண்டும் என்று சொந்த
தகப்பனாரிடம் நடந்து கொண்ட முறைகளை உங்கள் கேள்வியின் சம்பவம் விளக்குகிறது.
இது - மனிதனின்
செயல்!!
தலா ஒரு
ஆண்பிள்ளையை இந்த இரண்டு குமாரத்திகளுக்கும் பெற்றெடுத்தார்கள். ஒருவன் பெயர் மோவாப்
மற்றவன் பெயர் பென்னம்மி (அம்மோன் சந்ததிக்கு இவன் தகப்பன்) ஆதி 19: 37-38
தங்கள் தாயின் இந்த
செயலுக்காக இந்த இரண்டு சந்ததி (மோவாபியரும் அம்மோனியரும்) முழுவதும் தன் சந்நிதானத்திற்குள்ளே
தேவன் நுழையக்கூடாது என்று தண்டனை வழங்கியுள்ளார் – உபா 23:3.
தேவன்
பரிசுத்தமுள்ளவர்.
அவரிடத்தில் பாவம்
சேரலாகாது.
மனிதன் பரிசுத்தமடையாமல்
அவரை தரிசிக்கலாகாது.
இயேசுவின் சிலுவை
மரணத்திற்கு பின் – மனிதன் கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியும்போது தன் பாவம்
மன்னிக்க பெறுகிறான்.
வானத்தின் கீழே பூமியெங்கிலும்
கிறிஸ்துவையல்லாமல் வேறெந்த வகையிலும் பாவ மன்னிப்பு பெற முடியாது (அப் 4:12)
மனிதன் செய்த
கேவலமான - அதை படிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் செயலை ஒப்பிட்டு பார்க்கவும் அவர்களுக்கு
கிடைத்த தண்டனையிலிருந்து தாங்களும் தப்பித்துக்கொள்ளவும் வேதத்தில் தேவன் இடம்
பெற செய்ததன் மூலம் நமக்கு எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது.
நன்றி
எடி ஜோயல்
** அனைத்து கேள்வி பதில்களும்
வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
ஈமெயிலில் பெற Subscribe பண்ணிக்கொள்ளவும்.
கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2 :
கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1 :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக