#198 - *மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன் என்று வருகிறதே?*
#123ம் கேள்விக்கான பதிலில் – பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகள் சுமப்பதில்லை என்று பதிலளித்தீர்கள் – ஆனால் யாத். 20:5ன் படி பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன் என்று வருகிறதே?
*பதில்:*
மனந்திரும்பாத
பிள்ளை எத்தனை தலைமுறையானாலும் தேவன் அவர்களை விசாரிப்பார். (யாத். 34:7, 20:5, யோபு 21:19)
மற்றவர் பாவத்தை
இன்னொருவர் சுமப்பதல்ல ஆனால் விசாரிப்பார் !!
இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று
நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும்
நீதியையும் செய்து, என் கட்டளைகளைக்
கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். (எசே. 18:19)
தகப்பனை போல
அல்லது பிள்ளையை போல இல்லாதபடி அவர்கள் மனந்திரும்பினால் – இரங்குகிறவர்.. அதை அடுத்த
வசனத்திலேயே காணமுடியும்..
அவரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் கற்பனைகளைக்
கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவர் என்று யாத். 20:6ல்
பார்க்கிறோம்.
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசே. 18:4
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக்
கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே
நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய
ஆண்டவர் சொல்லுகிறார். எசே. 18:9
ஆனாலும் அவனுக்கு
ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும்
இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி
நடவாமல்… (எசே.
18:10)
….. இந்த எல்லா
அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே
சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். (எசே. 18:13)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக