வியாழன், 6 ஜூன், 2019

#199 கேள்வி: யோவான் 6:48 – 58 முடிய விளக்குங்கள். மேலும், இதை கர்த்தருடைய பந்தியில் உபயோகிக்கலாமா ?

#199
கேள்வி:
அண்ணா, கீழ்காணும் வசனங்களை  விளக்குங்கள்.
ஜீவ அப்பம் நானே…..
யோவான் 6:48 – 58 முடிய
மேலும், இதை கர்த்தருடைய பந்தியில் உபயோகிக்கலாமா ?

பதில்:
இயேசுவோடு கூடவே இருந்து விட்டால் எல்லா வேளைக்கும் சாப்பாடு கிடைத்துவிடும் என்று நினைத்து அவர் பின்னே ஒரு கூட்டம் தொடர ஆரம்பித்தது (யோ 6:22-27)

அவர்களிடத்தில் இயேசு கிறிஸ்து சொன்னார் – இந்த அழிந்து போகிற போஜனத்திற்காக என்னை நீங்கள் தேடுவதை காட்டிலும் இதிலும் மேன்மையான ஒரு நாளும் அழியாத அப்பமாகிய என்னை தேடுங்கள் என்று அவர்களுக்கு தன்னை குறித்து விளக்கும் வசனங்கள் இவை (யோ 6:48-58)

மோசேயின் நாட்களில் வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வானத்திலிருந்து முத்துக்கள் போல அநுதினமும் மன்னா வந்து விழுந்தது. அதை அவரவர் சேர்த்து, மாவாக இடித்து, அப்பங்கள் சுட்டு சாப்பிட வேண்டியது. வானத்திலிருந்து விழுந்ததை அப்படியே சாப்பிடவில்லை !!.... அதில் அவரவர் அநுதினமும் வேலை செய்ய வேண்டும்.. (எண் 11:7-9)

நிச்சயமாக இந்த வசனங்களை முன்னிட்டு கர்த்தருடைய பந்தியில் ஜனங்களுக்கு விவரிக்கலாம்.


நன்றி

எடி ஜோயல்

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions 
ஈமெயிலில் பெற Subscribe பண்ணிக்கொள்ளவும்.


கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2

கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக