ஞாயிறு, 2 ஜூன், 2019

#196 - முழுக்கு ஞானஸ்நானம் தான் எடுக்க வேண்டும் என்று வேதாகமத்தில் உள்ளதா?

#196 - *முழுக்கு ஞானஸ்நானம் தான் எடுக்க வேண்டும் என்று வேதாகமத்தில் உள்ளதா?* முழுகி ஞானஸ்நானம் எடுக்காவிட்டால் பரலோகம் போக முடியாதா? விளக்கவும்

*பதில்*:
Baptizo என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் முழுகுதல்.

ஆரம்ப காலங்களில் தமிழில் வேதாகமத்தை மொழி பெயர்த்தவர்கள் சமஸ்கிருதம் பேசி பழகினவர்களானதாலும் அவர்கள் தெளிப்பு முறையை பின்பற்றும் சபையை சார்ந்தவர்களானதால் – இந்த வார்த்தையை லாவகமாக  ஞானஸ்நானம் என்று மொழிபெயர்த்தனர்.

ஆங்கிலத்திலும் – இந்த Baptizo வார்த்தையை முழுகுதல் என்று மொழிபெயர்த்தால் அவர்கள் பின்பற்றும் முறை தவறானதாக ஆகிவிடும் என்பதால் இந்த வார்த்தையை மொழி பெயர்க்காமல் அப்படியே Baptism என்று போட்டு விட்டார்கள்.

எப்படியானாலும் சத்தியத்தை *ஒருவராலும் மறைத்து விட முடியாது*.

*கீழே கவனிக்கவும்*:
தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, *மறுஜென்மமுழுக்கினாலும்*, பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

மறுபடியும் பிறக்க வேண்டும் (யோ. 3:3)
புதிய சிருஷ்டியாக வேண்டும் (கலா. 6:15)
பழையவைகள் ஒழிந்து போகவேண்டும் ( 2கொரி. 5:17)
பாவங்கள் கழுவபட வேண்டும் (அப். 22:16)
ஞானஸ்நானத்தில் சரீரம் *அடக்கம்* பண்ணப்படுகிறது (ரோ. 6:4, கொலோ. 2:12)
அதிக தண்ணீர் இருக்க வேண்டும் (யோ. 3:23)

ஒருவர் மரித்து விட்டால் அவருடைய தலையை மாத்திரம் அடக்கம் செய்வார்களா? முழு சரீரத்தையும் அடக்கியாக வேண்டுமே !!

வேதாகமத்தின் படி ஞானஸ்நானமானது – முழுகி எடுக்கப்படவேண்டும்.

தெளித்தலும் – ஊற்றுதலும் – தலையை மாத்திரம் ஒரு பாத்திரத்தில் முக்கி எடுப்பதும் – வேதாகம முறையல்ல. அவைகள் மனிதனால் புகுத்தப்பட்ட *தவறான ஆதாரமற்ற சுய கற்பனை போதனையாகும்*.

இரட்சிப்பிற்கு 5 படிகளை நாம் புதிய ஏற்பாட்டில் பார்க்க முடிகிறது.

1)*வசனத்தை கேட்க வேண்டும்*
ரோமர் 10:17, விசுவாசம் கேள்வினால் வரும்). விசுவாசம் பாரம்பரியமாய் வருவதில்லை..
   
பாவம் செய்கிற ஆத்துமாவே சாகிறது (எசே. 18:20)

கிறிஸ்தவமானது – போதிக்கப்படவேண்டிய ஒரு மார்க்கம் (மத். 28:18-20)

சுவிசேஷத்தை ஜனங்கள் கேட்க வேண்டும் (1கொரி. 15:1-4)

2)*கேட்ட வசனத்தை விசுவாசிக்க வேண்டும்*
மத்தேயு 16:16 - கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும்

யோவான் 8:24 - விசுவாசிக்காவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

அப். 16:30-31 - அவரை விசுவாசியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்

மாற்கு 16:16 - விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான்

ரோமர் 10:17 - விசுவாசம் கேள்வியினாலே வரும்

3)*மனம்திரும்ப வேண்டும்*
அப். 17:30-31 - மனம்திரும்பி இரட்சிக்கப்படவேண்டும்

லூக்கா 24:47 - மனம்திரும்புதலும் பாவமன்னிப்பும் பிரசங்கிக்கபடவேண்டும்

2கொரி. 7:10 - வருந்தும்போது இரட்சிப்பு வருகிறது

அப். 2:37 - மனதில் குத்தப்பட்டார்கள்

1தெச. 1:9 - மனம்திரும்பும்போது பாவத்தை விட்டு வெளிவருகிறான்

4)*அறிக்கையிடவேண்டும்*
சபை  ஸ்தாபிக்கப்பட அடிப்படையாக “கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று அறிக்கையிட்ட போது நடந்தது – மத். 16:16, 18, அப். 4:11-12, 1கொரி. 3:11

தான் பிதாவின் முன்பு அறிக்கையிடவேண்டும் என்றால் தன்னை மற்றவர் முன்பு அறிக்கையிடவேண்டும் என்று கிறிஸ்து கூறினார் – மத். 10:32-33

கர்த்தராகிய இயேசுவை வாயினாலே அறிக்கையிட்டால் இரட்சிப்பு வரும் (ரோமர் 10:8-10)

இயேசு தேவனுடைய குமாரன் என்று ஞானஸ்நானத்திற்கு முன்னர் அறிக்கையிட்டதை பார்க்கிறோம் (அப். 8:37-38)

பாவத்தை அல்ல – விசுவாசத்தை அறிக்கையிடவேண்டும்.

5) *பாவ மன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்*
ஞானஸ்நானம் எடுக்கிறவர் இரட்சிக்கப்படுவார் – மாற்கு 16:16, அப். 2:38, 

ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது பாவம் மன்னிக்கப்படுகிறது (அப். 22:16)

*ஞானஸ்நானத்திற்கு பின்னர்* செய்யும் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட வேண்டியது அவசியம். (யாக். 5:16, 1யோ. 1:9)

அந்த பாவங்களை தேவனிடத்தில் மாத்திரம் இல்லாமல் யாருக்கு விரோதமாய் செய்தோமோ அவர்களிடத்திலும் நாம் ஒப்புரவாவது அவசியமாயிருக்கிறது. (யாக். 5:16)

மேலும் – இந்த தலைப்பில் நீங்கள் கேட்ட வீடியோ செய்தியை இந்த லிங்கில் காணலாம் :


https://www.youtube.com/watch?v=mqaT34M_bAY

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக